சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

எடுத்த 14 படத்தில் இரண்டு படம்தான் ஹிட்.. இருந்தாலும் AL விஜய்க்கு குவியும் வாய்ப்புகள்!

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு தோல்விப்படம் கொடுத்தாலே அதிலிருந்து மீண்டு வருவது சிரமம். ஆனால் ஏ எல் விஜய் தன்னுடைய சினிமா கேரியரில் இதுவரை 14 படங்களை எடுத்துள்ளார். ஆனால் அதில் வெற்றிப் படங்கள் என்று பார்த்தால் இரண்டே இரண்டுதான்.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பாளர் அழகப்பன் என்பவரின் மகன்தான் ஏ எல் விஜய். இவர் தல அஜித்தை வைத்து கிரீடம் என்ற படம், தளபதி விஜய்யை வைத்து தலைவா என்ற படத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் இரண்டுமே பெரிய அளவு வெற்றியை பெறவில்லை.

அதிலும் தலைவா படம் சந்தித்த பிரச்சனை எல்லாம் கொஞ்ச நஞ்சமில்லை. அதுமட்டுமில்லாமல் ஏஎல் விஜய் இதுவரை தன் கேரியரில் கொடுத்த வெற்றிப் படங்கள் என்று பார்த்தால் மதராசப்பட்டினம் மற்றும் தெய்வ திருமகள் ஆகிய இரண்டு படங்கள்தான்.

அதை தவிர அவர் எடுத்த கிரீடம், பொய் சொல்ல போறோம், தாண்டவம், தலைவா, சைவம், இது என்ன மாயம், தேவி, வனமகன், தியா, லக்ஷ்மி, வாட்ச்மேன், தேவி 2 போன்ற படங்கள் அனைத்துமே முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்டவில்லை.

இருந்தாலும் எப்படி ஏ எல் விஜய்க்கு வருடத்திற்கு குறைந்தது இரண்டு பட வாய்ப்புகளாவது கிடைத்து வருகிறது என பலரும் யோசித்து வருகிறார்களாம். அதற்கு காரணம் ஏ எல் விஜய் எடுக்கும் அனைத்து படங்களுமே மிக குறைந்த பட்ஜெட் படங்களாகும். அதுமட்டுமில்லாமல் அவரது படங்களுக்கு தொலைக்காட்சிகளில் நல்ல வரவேற்பு இருப்பதால் சேட்டிலைட் உரிமம் அதிக விலைக்கு செல்கிறதாம்.

al-vijay-cinemapettai-01
al-vijay-cinemapettai-01

இதனாலேயே தியேட்டரில் படம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் ஏ எல் விஜய்யை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்களாம். அந்த வகையில் அடுத்ததாக ஏ எல் விஜய் இயக்கத்தில் பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் கங்கனா ரனாவத் நடிப்பில் தலைவி என்ற படம் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News