செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நான்கு ஹீரோயின்களை வைத்து நறுக்குன்னு படமெடுத்த ஏ எல் விஜய்.. டைட்டிலே கிளுகிளுப்பா இருக்கு!

குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் தரமான படங்களை எடுப்பதில் வல்லவரான வலம் வருகிறார் ஏ எல் விஜய். அந்த வகையில் தற்போது நான்கு ஹீரோயின்களை வைத்து மிக வேகமாக ஒரு படத்தை எடுத்து முடித்து விட்டாராம்.

ஏஎல் விஜய் படங்கள் பெரிய அளவு வசூல் செய்யவில்லை என்றாலும் முதலுக்கு மோசம் இல்லை என்கிற அளவுக்கு அவரது படங்கள் வெற்றியை பெற்று விடும். இதனாலேயே அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அடுத்ததாக விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்த தலைவி படம் மூன்று மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. அது தியேட்டரிலா அல்லது இணையதளங்களிலா என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளான நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், பிகில் பட நடிகை ரெபா மோனிகா போன்றோரை வைத்து ஒரு படத்தை எடுத்து விட்டாராம்.

அந்த படத்திற்கு அக்டோபர் 31-லேடீஸ் நைட் என பெயர் வைத்துள்ளார். வெறும் ஒரு மாத கால கட்டத்தில் இந்த படத்தை எடுத்து விட்டாராம் விஜய்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி உள்ளதாகவும், மேலும் நேரடி ஓடிடி படமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

nivetha-pethuraj-cinemapettai
nivetha-pethuraj-cinemapettai

Trending News