செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

எளிதில் செட்டாகும் விஜய்.. பெரிய கேள்விக்குறியான விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்

தளபதி விஜய் இப்போது லோகேஷ் கூட்டணியுடன் இணைந்து லியோ படத்தில் பணியாற்றி வருகிறார். லியோ படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்த சூழலில் தளபதி 68 படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் உள்ளாக்கியது.

முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் தளபதி 68 இல் இணைகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் வெங்கட் பிரபுவை பொருத்தவரையில் ஒரு ஜாலியான பேர்வழி. அவரது டீம் எப்போதுமே கலகலப்பாக இருக்கக்கூடியவர்கள்.

Also Read : தோல்வி இல்லாமல் அஜித், விஜய்யை இயக்கிய ஏழு இயக்குனர்கள்.. 8-வதாக வந்து சேர்ந்த வெங்கட் பிரபு

சென்னை 600028 படத்தைப் போல அவர்களைச் சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம் சுற்றி இருந்து கொண்டே இருக்கும். அதுவும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கலாய்த்து கொள்வார்கள். இதற்கு மங்காத்தா படப்பிடிப்பு நடந்த இடமே நல்ல உதாரணமாக இருந்தது. எப்போதுமே சிரித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டு இருப்பார்களாம்.

ஆனால் விஜய்யை பொறுத்தவரையில் அதிகம் படப்பிடிப்பில் யாரிடமும் பேச மாட்டார், தான் உண்டு வேலை உண்டு என்று இருக்கக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதனால் வெங்கட் பிரபு கூட்டணியில் விஜய் செட்டாவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Also Read : விஜய்க்கு ஒர்க் அவுட் ஆனது பிரசாந்துக்கு எடுபடல.. சொந்தக்காசிலே சூனியம் வச்சுக்கிட்ட கொடுமை

ஆனால் விஜய்க்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் தான். இவர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் நட்பு வட்டாரம் என்று வந்துவிட்டால் இவரை மாதிரி லூட்டி அடிக்க ஆளே இல்லையாம். எல்லோரையும் விட விஜய் மோசமாக அனைவரையும் கலாய்ப்பாராம்.

இதை பலமுறை பேட்டியில் விஜய் நண்பர்களே கூறி இருக்கிறார்கள். இதனால் விஜய்யை தனது நட்பு வட்டாரத்துக்குள் வெங்கட் பிரபு கொண்டு வந்து விட்டால் வேற லெவலில் இந்த காம்போ செட்டாகி விடும். ஏற்கனவே ஒரு முறை விஜய் மிகவும் ஜாலியான கேரக்டர் என வெங்கட் பிரபுவே கூறி இருக்கிறார்.

Also Read : விஜய் கூட சண்டை முத்தினதுக்கு முக்கிய காரணம் அவங்க தான்.. வெளிப்படையாக கூறிய எஸ்ஏசி

Trending News