வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

Jailer 2 படத்துக்குப் பின் PAN INDIA STAR-உடன் கூட்டணி.. நெல்சனின் அலப்பறை

தெலுங்குப் பட ஹீரோக்கள் தமிழில் வலுவாகக் கால்பதிக்க முடியாமல் இருந்த காலம்போய், பாகுபலி, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் ஆகிய படங்களுக்குப் பின் தமிழில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக செல்வாக்கை அவர்களும் பெற்றுள்ளனர்.

அதனால் அவர்களின் ஒவ்வொரு படங்களும் மற்ற மொழிகளில் ஏற்படும் எதிர்பார்ப்பு போலவே தமிழிலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூனியர் என்.டி.ஆருடன் நெல்சன் ஒரு புதிய படத்தில் கூட்டணி அமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகிறது.

தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்தாண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ஜெயிலர். இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி உலகம் முழுவதும் 650 கோடிக்கு மேல் வசூலித்தது.

எனவே விரைவில் சூப்பர் ஸ்டார் கூட்டணியில் ஜெயிலர் 2 வது பாகம் தயாராகும் என இயக்குனர் நெல்சன் சமீபத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். ஜெயிலர் முதல் பாகத்தில் இருந்த அதே கூட்டணிதான் இதிலும் தயாராகி இருக்கிறது என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

ஜெயிலர் 2 படத்துக்குப் பின் யாருடன் கூட்டணி

இந்த நிலையில், தமிழில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ள நெல்சன், ஜெயிலர் 2 படத்துக்குப் பின் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி எழுந்தது. அதற்குப் பதில் சொல்லும் விதமான புதிய தகவல் வெளியாகிறது. அதன்படி, நெல்சன் அடுத்து, ஆர்.ஆர்.ஆர், தேவரா ஆகிய அடுத்தடுத்துப் பான் இந்தியா படங்கள் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜூனியர் என்.ஆடி.ஆரை வைத்து படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதற்காக, ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆரிடம் நெல்சன் சில கதைகளை கூறியிருக்கும் நிலையில், இதில் ஒன்றில் இம்ஸ்ரசான ஜூனியர் என்.டி.ஆர் பிரபல தயாரிப்பு நிறுவனத்துக்கு கால்ஷூட் கொடுத்துள்ளதாகவும், இப்படமும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

இனி நெல்சனை கையில் பிடிக்க முடியாது

ஜெயிலர் 2 வை முடித்துவிட்டு வருவதற்கும் கேஜிஎஃப் இயக்குனர்ன்பிரசாந்த் நீலுடன் ஜூனியர் என்.டி.ஆர் கூட்டியில் ஒரு படத்தை முடித்துவிட்டு, அதன்பின், நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆர் ரெடியாகிவிடுவார் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தெலுங்கில் ஹிட்டானால் சில ஆண்டுகளுக்கு நெல்சன் தெலுங்கில் அலப்பறையை கிளப்புவார். தமிழ் இயக்குனர்கள் அவரை கையில் பிடிக்க முடியாது என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News