புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வடசென்னையில் விட்ட இடத்தைப் பிடிப்பாரா சிம்பு? மாறனுடன் போடும் கூட்டணி

லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து இளம் வயதில் கட்டம் கட்டி அடித்தவர் சிம்பு. அதன்பின், அவர் நடிக்கும் படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றன. அதிலிருந்து மீண்டு மாநாடு முதல் கம்பேக் கொடுத்தார்.

இப்போது தக்லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அடுத்து, கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

அதையடுத்து, சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்படம் பற்றித்தான் கோலிவுட்டில் ஹாப் டாப்பிக்காக உள்ளது.

வெற்றிமாறன் கை வைத்தாலே அது ஹிட்டுதான். விரைவில் இப்படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
அவர் படத்தில் நடிக்கும் நடிகர்களும், தேசிய விருது என அடுத்தக்கட்டத்துக்குச் செல்வார்கள்.

தனுஷ் விஷயத்திலும் அது நடந்தது. இந்த நிலையில் தனுஷே ஒரு பேட்டியில், வடசென்னையில், சிம்புவுடன் நானும் சேர்ந்து நடிக்க வேண்டும் என வெற்றி மாறன் கேட்டார். என்னால் முடியாது என்று கூறிவிட்டேன்.

அதாவது, அன்பு கேரக்டரில் சிம்புவையும், ராஜன் கேரக்டரியில் என்னையும் நடிக்கும்படி கேட்டார். அந்தளவுக்கு என்னிடம் பெருந்தன்மை இல்லை என க் கூறிவிட்டேன்.

அதன்பின், அமீரை அணுகி, அவரை கட்டாயம் இதில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி நடிக்க வைத்தார் என்று கூறினார்.

வடசென்னை 2- ல் சிம்பு நடிக்கிறாரா?

வடசென்னை சிம்புக்காக எழுதப்பட்ட கதை அவர் நடித்திருந்தால் இன்னும் வேற லெவருக்குப் போயிருக்கும் படம் என அவரது ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

எனவே வடசென்னையில் விட்ட இடத்தை பிடிக்க, வெற்றிமாறனுடன் அடுத்த படத்தில் சிம்பு கூட்டணி வைத்துள்ளார்.

அதனால் வடசென்னையில் தனுஷ் நடித்த அன்பு கேரக்டரை விட, இதில் அதிக முக்கியத்துவம் உள்ள கேரக்டராக படம் உருவாகும் என கூறப்படுகிறது. இதுவும் வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் கதையா? இல்லை வடசென்னை 2 ஆம் பாகமா என கேள்வி எழுந்துள்ளது.

Trending News