செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

100 கோடி வசூலை பார்த்தவுடனே விஜய்யுடன் கூட்டணியா? யாரும் எதிர்பார்க்காத மெகா காம்போ

பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருக்கும் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களின் ஆசையாக இருக்கிறது. அப்படித்தான் ஒரு இயக்குனர் படம் எடுத்தால் விஜய்யை வைத்து தான் எடுப்பேன் என்று பிடிவாதமாக காத்திருக்கிறாராம்.

கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் வெளிவந்த லவ் டுடே திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளார். மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடி வரை லாபம் பார்த்திருக்கிறது. ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் தன்னை அடையாளப்படுத்திய பிரதீப்பை தேடி தற்போது பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

Also read: 2022 ஆம் ஆண்டு ட்ரெண்டிங்கில் இருந்த டாப் 6 ஹீரோயின்ஸ்.. ரசிகர்களை திணறடித்த லவ் டுடே நிகிதா

ஏற்கனவே இவர் விஜய்க்கு ஒரு கதையை கூறி இருப்பதாகவும் விரைவில் அவரை வைத்து படம் இயக்குவேன் என்றும் கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் விஜய் எப்பொழுது என் படத்தில் நடிக்க ஓகே சொல்கிறாரோ அதுவரை நான் காத்திருப்பேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

அதன்படி அவர் விஜய்க்கு ஒரு சயின்ஸ் சம்பந்தப்பட்ட கதையை தான் கூறியிருக்கிறார். அதற்கு விஜய் தான் பொருத்தமானவர் என்றும் அந்த கதையை பொருத்தவரை வேறு எந்த ஹீரோவும் என் மனதில் இல்லை என்றும் கூறியிருக்கிறார். அதனால் விஜய் தான் அந்த படத்தில் நடிக்க வேண்டும் இல்லை என்றால் வேறு எந்த ஹீரோவையும் வைத்து அந்த கதையை நான் உருவாக்க மாட்டேன் என்று பிரதீப் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

Also read: விஜய்யை பார்த்து பயந்த போனி கபூர்.. ஒரே வார்த்தையால் தைரியம் கொடுத்த அஜித்

அவர் இப்படி நம்பிக்கையுடன் கூறுவதை பார்த்தால் நிச்சயம் விஜய் இந்த படத்தில் நடிப்பார் என்றே தெரிகிறது. அந்த வகையில் பிரதீப் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறதாம். யாரும் எதிர்பார்க்காத இந்த மெகா கூட்டணி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதை தொடர்ந்து அவர் அடுத்ததாக யாருடன் இணைவார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பிரதீப் அந்த இடத்தை பிடித்து விட்டார். லவ் டுடே என்ற ஒரே படம் அவரை இன்று உச்சாணி கொம்புக்கு கொண்டு சென்று விட்டது. மேலும் அவர் மற்ற ஹீரோக்களை வைத்து மட்டுமல்லாமல் தானே ஹீரோவாக நடித்து படங்களை இயக்கவும் அவர் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: தளபதி 67 க்கு அட்டகாசமாக ரெடியான விஜய்.. சோசியல் மீடியாவை கலக்கும் போட்டோ

Trending News