வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

விஜய் உடன் கூட்டணியா? ட்விஸ்ட் வைத்த திருமாவளவன்.. தொண்டர்கள் எதிர்பார்ப்பு என்ன?

தமிழ் நாட்டில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ளது. இத்தேர்தலுக்கு இப்போதே அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் இப்போதே தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் தேர்தலுக்கு தொண்டர்களையும், நிர்வாகிகளையும், மாவட்டச் செயலாளர்களையும் ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி, கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி வி.சாலையில் 8 லட்சம் தொண்டர்களைத் திரட்டி பிரமாண்ட மாநாடு நடத்திய விஜய் புதிய அரசியல் கட்சித்தலைவராக உருவெடுத்திருப்பதால் அவர் மீது மக்களின் பார்வை திரும்பியுள்ளது. அவரும் தன் கட்சியை திராவிய இயக்கங்களுக்கு இணையானதாக இருக்க வேண்டுமென வலுப்படுத்தி வருகிறார்.

எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் பல்வேறு தகவல்களைக் கூறி வரும் நிலையில்,வரும் டிசம்பரில் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் புத்தகத்தை விஜய் வெளியிட திருமாவளவன் அதைப் பெற்றுக் கொள்கிறார்.

இந்த செய்தி வெளியானபோதே, திமுகவை விமர்சித்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என முழங்கிய ஆதர் அர்ஜூனா மீது திமுக கடுப்பானது. இதே முழக்கத்தை தான் விஜயும் தவெக மாநாட்டில் கூறியிருந்த நிலையில், தவெகவுடன் நெருக்கம் பாராட்ட வேண்டாம், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தால் என்னாகும் என திமுக, விசிகவுக்கு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

விஜய்யை சீண்டிவிட்டு, அவருடனே கூட்டணியா?

இதையடுத்து சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது திருமாவளவன் புதிய கட்சி தொடங்கிய விஜய்யை சீண்டும் வகையில் பேசியிருந்தார். ஆனால் விஜய் எதிர்வினை ஆற்றவில்லை.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது வரும் 2026 தேர்தலில் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா? எனக் கேட்டனர். அதற்கு திருமாவளவன் ’’பொறுத்திருந்து பாருங்கள்’’ என்று கூறிவிட்டார். வரும் தேர்தலில் யாருக்கும் அதிக பலம் என்பதைப் பொருத்து கூட்டணி நிலைப்பாடு மாறும்.

ஆனால், ஆளுங்கட்சியுடன் இப்போது கூட்டணி வைத்திருப்பதால் விஜய் பற்றி முடிவெடுக்க முடியாமல் விசிக இருப்பதாகவும் திருமாவின் முடிவு தான் அக்கட்சித் தொண்டர்களின் முடிவாக இருக்கும் என தகவல் வெளியாகிறது.

- Advertisement -spot_img

Trending News