வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வசூலில் புதிய சாதனை படைத்த புஷ்பா.. எத்தனை கோடி தெரியுமா?

சமீபகாலமாகவே பான் இந்தியா படங்கள் அதிகளவில் வெளியாகி வருகின்றன. முன்பெல்லாம் ஒரு மொழியில் படம் வெளியானால் அதை மற்ற மொழிகளில் டப் செய்தோ அல்லது ரீமேக் செய்தோ வெளியிடுவார்கள். ஆனால் தற்போது அப்படி அல்ல ஒரு படத்தை எடுக்கும்போதே அனைத்து மொழிகளிலும் எடுத்து விடுகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் பான் இந்தியா படமாக வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் படம் தான் புஷ்பா. பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகமான புஷ்பா தி ரைஸ் கடந்த 17 ஆம் தேதி வெளியானது.

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் டாப் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களின் கூட்டம் குறையவேயில்லை. ஐந்து மொழிகளிலும் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. அதேபோல் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது.

அதன்படி புஷ்பா படம் உலகம் முழுவதும் வெளியான மூன்று நாட்களில் சுமார் 173 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வரை மட்டும் புஷ்பா படம் உலகம் முழுவதும் சுமார் 275 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாம்.

படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதால், நிச்சயம் 325 முதல் 350 கோடி ரூபாய் வசூல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பான் இந்தியா படங்களில் புஷ்பா படம் ஒரு புதிய சாதனையை படைத்து விட்டது. அதுமட்டுமின்றி இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படம் புஷ்பா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News