செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

ரிலீஸுக்கு முன்பே ரெக்கார்ட் பிரேக் செய்த புஷ்பா.. இத்தனை கோடி விற்பனையா.?

ஒரு சில படங்கள் மட்டுமே வெளியாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும். அந்த வகையில் தற்போது பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படம் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் என அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் புஷ்பா படத்தில் சமந்தா ஆடியுள்ள குத்துப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றதோடு விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்த பாடலில் ஆண்களை இழிவுப்படுத்தியதாக கூறி ஆண்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் பலர் பாடலையும், சமந்தாவையும் ரசித்து கொண்டு தான் இருக்கிறார்கள். சரி நாம் விஷயத்திற்கு வருவோம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா தி ரைஸ் படத்தின் முதல் பாகம் வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஒரு பான் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படம் வெளியாகும் முன்பே தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ என அனைத்து உரிமைகளும் சுமார் 250 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாம்.

இதுதவிர அனைத்து மொழிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையையும் அதிக விலைக்கு ஓடிடி தளம் ஒன்று கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு படமும் இந்த அளவிற்கு விற்பனை ஆனதில்லை. வெளியீட்டிற்கு முன்பே பல கோடி ரூபாய் வசூலை குவித்துள்ள புஷ்பா படம் அதிக தொகைக்கு விற்பனையாகி முந்தைய சாதனைகளை பிரேக் செய்துள்ளது.

pushpa-cinemapettai
pushpa-cinemapettai
Advertisement Amazon Prime Banner

Trending News