ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

டபுள் மீனிங்கில் சர்ச்சையான சமந்தா பாடல்.. அல்லு அர்ஜுன் அளித்த ஷாக்கிங் பதில்

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த வரும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுன் செம்மரம் கடத்துபவராக இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 17 வெளியாக உள்ளது. இதனால் படத்தின் புரமோஷனுக்காக ஓ சொல்றியா என்ற ஐட்டம் பாடலை படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடலில் நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார்.

இந்தப் பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்தப் பாடலில் இடம்பெற்ற வரிகள் ஆண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக சில தினங்களுக்கு முன் ஆந்திரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இப்பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் வகையில் இப்பாடல் வரிகள் உள்ளதாகவும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் தேவிஸ்ரீபிரசாத், சமந்தா, ஆண்ட்ரியா, பாடலாசிரியர் மீது வழக்கு தொடரப்படும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில் புஷ்பா படக்குழு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து. அப்போது அல்லு அர்ஜுன் பேசும் பொழுது, தெலுங்கு பேசும் தமிழ் பையன் என்று என் நண்பர்கள் என்னை அழைப்பார்கள் என்று கூறினார். நான் தமிழ்நாட்டில் பிறந்து 20 வருடங்களாக இங்குதான் வாழ்ந்ததாகவும், நல்ல படத்துடன் தான் இங்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை வருடங்கள் காத்திருந்ததாகவும் கூறினார். தமிழ்நாட்டில் என் படம் வெற்றி பெற்றால்தான் நான் சாதித்தது போல் உணர்வேன் என்றும் கூறினார்.

நீ சொல்றியா பாடல் ஹிட்டானது அதேநேரத்தில் அந்தப் பாடலின் வரிகளுக்கு, ஆண்கள் எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள், நீங்களும் ஒரு ஆண் தான், நீங்கள் எப்படி என்று ஃபீல் பண்றீங்க என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அல்லு அர்ஜுன் உண்மைதானே என்று சொல்லிவிட்டு தேவிஸ்ரீ பிரசாத் இடம் மைக்கை கொடுத்துவிட்டார்.

Trending News