இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா. இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புடனும், வரவேற்புடனும் வெளியாகி உள்ளது.
செம்மரக் கடத்தலை மையப்படுத்தி இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் அனைத்தும் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதுமட்டுமல்லாமல் முன்னணி நடிகையான சமந்தா இப்படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை எல்லாம் பொய்யாக்காமல் படம் ஆந்திராவில் சக்சஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தை விளம்பரம் படுத்துவதற்காக பட குழு சென்னை, கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது நடந்த சந்திப்பில் அல்லு அர்ஜுன் உட்பட படக்குழுவினர் அனைவரும் சரியான நேரத்திற்கு வந்துள்ளனர்.
ஆனால் படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா மட்டும் சரியான நேரத்திற்கு வராமல் இருந்துள்ளார். அவருக்காக பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரும் காத்திருந்தார்களாம். பிறகு 2 மணி நேரம் கழித்துதான் ராஷ்மிகா பிரஸ் மீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் கடுப்பான பத்திரிகையாளர்கள் அனைவரும் அவரை கிழி கிழி என்று கிழித்து விட்டார்களாம். அதிலிருந்து ராஷ்மிகாவை காப்பாற்றும் பொருட்டு நடிகர் அல்லு அர்ஜுன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். அதன் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு வழியாக நடந்து முடிந்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணியில் இருக்கும் அல்லு அர்ஜுன் தன் பட ஹீரோயினுக்காக பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.