புஷ்பா 2 வெளியான இந்த நேரத்தில், வேற ஒரு செய்தியும் வேகமாக பரவி வருகிறது. எப்படி தான் இவர்களுக்கு, மட்டும் இந்த மாதிரியான தகவல்கள் கிடைக்கிறது என்று ஆச்சரிய படவைக்கும் விஷயம் அது. அது என்னவென்றால், அல்லு அர்ஜுன் முகத்தில் வந்த மாற்றத்தை வைத்து வெளியான ஒரு தகவல் தான்.
ஆரம்ப காலத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த படங்களில் அவர் முகம் வேறு மாதிரி இருக்கும். அதே நேரத்தில், இப்போதவர் மிகவும் ஸ்டைலிஷ் ஆக மாறியது மட்டுமின்றி, அவரது மூக்கு முன்பை விட ஷார்ப்பாக மாறியுள்ளது. இதை பார்த்த ஒரு டாக்டர் கொளுத்தி போட்ட ஒரு விஷயம் தான் தற்போது கொழுந்து விட்டு எரிகிறது.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த அல்லு அர்ஜுன்?
அந்த மருத்துவர் அல்லு அர்ஜுன் ஒரு வகையான பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். ஏன் என்றால் அவர் முகமே மாறிவிட்டது. மூக்கு பகுதியை கவனித்து பாருங்கள் என்று கொளுத்தி போட்டார். இதை தொடர்ந்து இந்த தகவல் சோசியல் மீடியாவில் வேகமாக பரவ ஆரம்பித்தது.
பலர், ஆம் இவர் செய்திருக்கிறார் என்று கூற, அதற்க்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து, இல்லை.. அவர் செய்யவில்லை என்று கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து, இது ஒரு விவாதமாகவும் மாறியுள்ளது. அனால் இதுவரை அல்லு அர்ஜுன் தரப்பில் இருந்து இதற்க்கு எந்த பதிலும் அளிக்கவில்லை..
இதெல்லாம் தேவை இல்லாத கன்டென்ட், அவரை பொறுத்த அளவில் இதற்க்கு பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை, இதையெல்லாம் தலையில் ஏற்றி கொள்வதற்கு நேரமும் இல்லை. அப்படியே செய்திருந்தாலும், அது அவர் இஷ்டம்.