புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அல்லு அர்ஜுன் ஃபேமிலியவே மிரள விட்ட அட்லீ.. சம்பளம் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்து மொத்தத்தையும் உருவிய சின்ன தம்பி!

Allu Arjun family shocking for atlee’s demand: தமிழ் திரையுலகில் “ராஜா ராணி” படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தான் இயக்கிய அத்தனை படங்களையும் ஹிட்டாக்கி விட்டு பாலிவுட்டுக்கு சென்று சாருக்கானுடன் கை கோர்த்தார்.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் உலக அளவில் வசூலில் மாபெரும் சாதனை செய்து இந்திய திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலரும் அட்லீயின் பார்வை தன்மீது பட்டுவிடாதா என்று தவம் கிடக்க ஆரம்பித்தனர்.

விஜய்க்கு தெறி,மெர்சல்,பிகில் என ஹாட்ரிக் வெற்றி கொடுத்ததோடு கடைசி படமான விஜய் 69க்கும் இந்த கூட்டணி இணையும் என எதிர்பார்த்தது. 

ஆனால் சன் பிக்சர்ஸ் உடன் அல்லு அர்ஜுனின் அடுத்த படத்திற்கு ஒப்பந்தமானார் அட்லீ.

கூடுதல் தகவலாக அல்லு அர்ஜுனின் இத்திரைப்படம் பான் இந்தியா மூவியாக உருவாவதால் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து அல்லு அர்ஜுனனின் தந்தை அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் இணை தயாரிப்பு பணியை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.

இயக்கம் அட்லி என்பதால் ஆயிரம் கோடி வசூல் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அட்லீக்கு 60 கோடி சம்பளம் என பேசப்பட்டுள்ளது. 

லாபத்தில் பங்கு கேட்கும்  இயக்குனர்

எக்ஸ்ட்ரா போனஸ் ஆக திரைப்படம் 500 கோடி வசூலை தாண்டினால் ரொம்ப வேண்டாம் 20% கமிஷன் மட்டும் போதும் என்று அடம் பிடிக்கிறாராம் அட்லீ.

இதை கேட்ட அல்லு அர்ஜுன் உள்பட அல்லு அரவிந்தின் மொத்த குடும்பமும் ஆடிப் போய்விட்டது. இதே மாதிரி தெலுங்கு இயக்குனர்கள் யாரும் இப்படி டிமாண்ட் வைத்தது இல்லையாம்.

ஜவான் கொடுத்த தைரியமும் அம்பானி வீட்டு திருமணத்தில் செலிபிரிட்டியாக கலக்கிய அட்லியின் தெனாவட்டும் சேர்ந்து அட்லீயை இவ்வாறு பேச வைத்துள்ளது.

“பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்” என்பது போல் மொத்த கதையையும், படத்தையும் தூக்கி நிறுத்தும் இயக்குனர் படத்தின்  கால்பகுதிக்கும் குறைவாக கமிஷன் கேட்பது நியாயமே என்று இயக்குனரின் நல விரும்பிகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

Trending News