வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

கோவத்தில் போஸ்டரை தும்சம் செய்த அல்லு அர்ஜுன் ரசிகர்கள்.. முதல் நாளே தரமான சம்பவம்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் தூண்டியது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் என்று அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த பாடலுக்கு ஒரு புறம் எதிர்ப்பு இருந்தாலும், மற்றொருபுறம் ரசிகர்கள் ரசிக்கவே செய்தனர்.

இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் பாகம் தற்போது வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. செம்மர கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. மேலும் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது. முதல் நாள் முதல் காட்சியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று இருந்த ரசிகர்கள் பலருக்கும் டிக்கெட் கிடைக்காமல் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.

டிக்கெட் கிடைக்காத விரக்தியில் ரசிகர்கள் பலரும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவின் ஒரு மாவட்டத்தில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் படத்தின் பேனரை கிழித்து எறிந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தின் ஒரு தியேட்டரில் புஷ்பா படத்தின் டிக்கெட் சட்டத்திற்கு புறம்பாக பிளாக்கில் விற்கப்பட்டுள்ளது. மக்களுக்கு டிக்கெட் கொடுக்காமல் பிளாக்கில் விற்றதால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் தியேட்டரில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ள இந்த செய்தி அந்த பகுதி மக்களை பரபரப்பாக்கியுள்ளது. அல்லு அர்ஜுன் போஸ்டரை கிழித்து ரசிகர்கள் வீடியோ

pushpa-allu-arjun-cinemapettai
pushpa-allu-arjun-cinemapettai

Trending News