பாகுபலி படங்களுக்குப்பிறகு தெலுங்கு நடிகர்கள் அனைவருமே தங்களுடைய படங்கள் அனைத்து மொழிகளிலும் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அந்த வகையில் அடம்பிடித்து எடுக்கப்படும் திரைப்படம்தான் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா.
புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் தென்னிந்தியாவில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.
ஆனால் ஹிந்தியில் எதிர்பார்த்த அளவு இல்லை என்கிறார்கள் விநியோகஸ்தக வட்டாரங்கள். அல்லு அர்ஜுனுக்கு பிரபாஸின் பாகுபலி படங்கள் போலவே தன்னுடைய படங்களும் மிகப்பெரிய வசூலை ஈட்ட வேண்டும் என்று ஆசையாம்.
பாகுபலி படங்களை இயக்குனர் கரண் ஜோகர் ஹிந்தியில் வாங்கி மிகப் பெரிய விளம்பரம் செய்த நல்ல லாபம் பார்த்தார். அதேபோல் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் லிகர், கே ஜி எஃப் 2 போன்ற படங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் கிடைத்து விட்டதாம்.
ஆனால் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தை வாங்க ஆளில்லை என செய்திகள் வெளிவந்துள்ளன. ஹிந்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு சுத்தமாக இல்லை என ஓபன் ஆகவே தெரிவித்து விட்டார்களாம்.
இருந்தாலும் மிகப்பெரிய விநியோகஸ்தர்களுக்கு வலைவீசி உள்ளதாம் படக்குழு. கண்டிப்பாக பாகுபலியை விட பிரம்மாண்ட விளம்பரம் செய்து படத்தை பெரிய அளவில் வெற்றி பெற செய்துவிட வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் அல்லு அர்ஜுன்.
