தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே அங்கு ரசிகர்களின் ஆதரவால் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன. இவரது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நடிகர்கள் என்பதால் இவரை குடும்ப வாரிசு நடிகர் என்று கூறும் வழக்கமும் தெலுங்கு சினிமாவில் உண்டு.
தெலுங்கு சினிமாவில் பொருத்தவரை எப்போதுமே ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மசாலா காட்சிகள் நிறைந்த படமாக காணப்படும். அதற்கு காரணம் பெருவாரியான தெலுங்கு சினிமா ரசிகர்கள் இதனை தான் விரும்புகின்றனர். அதனாலேயே பல இயக்குனர்களும் ஆக்ஷன் காட்சிகள் எந்த அளவு இருக்கிறதோ அதே அளவு மசாலா காட்சிகளை வைத்து விடுகின்றனர்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ala vaikunthapurramuloo பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனால் இவரது நடிப்பில் வெளியாகும் அடுத்தடுத்து படங்கள் மீதான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. 2 வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் நடிப்பதாக அறிவித்தனர். ஆனால் அதன் பிறகு அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை அதனால் அல்லு அர்ஜுன் மற்ற இயக்குனர்களுடன் பணியாற்றி வந்தார்.

தற்போது ஸ்ரீ ராம் வேணு இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் இதுவரை இவர் செய்யாத ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறி உள்ளனர். அதாவது கண்ணு தெரியாத கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தெலுங்கு சினிமா ரசிகர்கள் இதனை பெருமையாக பேசி வரும் நிலையில் ஒரு சிலர் தமிழ் ரசிகர்கள் அல்லு அர்ஜுன் ஒரு சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும் கண்ணு தெரியாத ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது ஒன்றும் பெரிய கதாபாத்திரம் இல்லை என கூறியுள்ளனர். மேலும் சுமாராக நடிக்கும் எங்கள் உதயநிதி அவர்கள் ஒரு படத்தில் நடித்துவிட்டதாகவும் சூசகமாக கிண்டல் செய்து வருகின்றனர்.