வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜய், ஷாருக்கானை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்.. புஷ்பா 2 படத்திற்காக வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா.!

Vijay: இப்போதெல்லாம் படத்தின் பட்ஜெட்டில் பாதி ஹீரோக்களின் சம்பளமாக இருக்கிறது. 500 கோடி செலவில் பிரம்மாண்டமாக படம் எடுக்கிறார்கள் என்றால் அதில் நாயகர்கள் வாங்கும் சம்பளம் 200 கோடியை தாண்டி விடுகிறது.

அதன்படி பாலிவுட் ஹீரோக்கள் தான் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக இருந்தனர். ஆனால் இப்போது தென்னிந்திய நடிகர்கள் அவர்களை ஓவர் டேக் செய்து பல கோடிகளில் சம்பளத்தை வாங்கி குவிக்கின்றனர்.

அந்த வகையில் விஜய் கோட் படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். தற்போது அவருடைய கடைசி படமான தளபதி 69 படத்திற்காக 270 கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

விஜய்யை ஓரம் கட்டிய அல்லு அர்ஜுன்

அதன்படி சமீபத்தில் பிரபல பத்திரிக்கை வெளியிட்ட தகவலில் கூட விஜய் தான் முதலிடத்தில் இருந்தார். அவருக்கு அடுத்ததாக ஷாருக்கான் 250 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் இவர்களை ஓவர் டேக் செய்து முதலிடத்தை பிடித்திருக்கிறார் புஷ்பா நாயகன்.

தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் புஷ்பா படத்திற்கு பிறகு மிகவும் பிரபலமான நடிகராக மாறிவிட்டார். அது மட்டுமின்றி இவருடைய மார்க்கெட் தற்போது உச்சத்தில் உள்ளது. விரைவில் புஷ்பா 2 வெளியாக இருக்கும் சூழலில் அப்படத்திற்காக இவருடைய சம்பளம் 300 கோடி என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இதை வைத்து பார்க்கும் போது அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்களின் பட்டியலில் இவர்தான் நம்பர் ஒன் ஆக இருக்கிறார். இதை தற்போது கொண்டாடி வரும் தெலுங்கு ரசிகர்கள் புஷ்பா 2 வந்த பிறகு அல்லு அர்ஜுன் மார்க்கெட் இன்னும் உயர்ந்துவிடும் என ஆர்ப்பரித்து வருகின்றனர்.

Trending News