Pushpa 2 Twitter Review: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த புஷ்பா மாபெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வந்த நிலையில் இன்று ரசிகர்களின் பார்வைக்கு வந்திருக்கிறது.
இதற்காக கடந்த சில வாரங்களாக படகுழு ஏகப்பட்ட பிரமோஷன் செய்தனர். அல்லு அர்ஜுன் தமிழ் ரசிகர்களை சந்தித்து செய்த பிரமோஷன் கூட ஒரு ஹைப் ஏற்றி இருந்தது. இப்படி பல அலப்பறைகளுக்கு மத்தியில் வெளிவந்த படம் எப்படி இருக்கிறது என ட்விட்டர் விமர்சனம் மூலம் காண்போம்.
தற்போது நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ள இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதில் அல்லு அர்ஜுன் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் திருடி விட்டார். அதேபோல் பகத் பாஸில் மிரட்டல் நடிப்பை கொடுத்து கை தட்டலை அள்ளியுள்ளார்.
மேலும் ராஷ்மிகாவும் தன்னுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் அதில் பின்னணி இசை நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதேபோல் ஹீரோவின் அறிமுகக் காட்சி இடைவேளை காட்சி சண்டை காட்சிகள் என அனைத்துமே மாஸ் தான்.
கதையின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பதும் சில ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அதே போல் பாடல் காட்சிகளில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா இருவரும் பட்டையை கிளப்பி இருக்கின்றனர்.
இதனால் தியேட்டர் அதிர்கிறது என ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இப்படியாக பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளிக் கொண்டிருக்கும் புஷ்பா 2 வசூலிலும் கெத்து காட்டி வருகிறது.