ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

மாஸ் காட்டிய தளபதி விஜய், சிவகார்த்திகேயன்.. புகழ்ந்து தள்ளிய அல்லு அர்ஜுன்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தில் பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார்.

இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் உருவாகியுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் செம்மரம் கடத்துபவராகவும், லாரி டிரைவர் ஆகவும் நடித்துள்ளார். புஷ்பா படம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படக்குழு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து.

அதில் பேசிய அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தில் காடுகளில் படப்பிடிப்பு எடுக்கும்பொழுது சவாலாக இருந்தது. இயக்குனர் சுகுமார் வடிவமைத்த கதாபாத்திரத்தில் நான் பொருந்துவதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. காடுகளில் ஏற்பட்ட எதிர்பாராத பருவநிலை மாற்றம் எங்களை மிகவும் அச்சுறுத்தியது, எதுவும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறினார்.

அல்லு அர்ஜுன் மிகச் சிறப்பாக நடனம் ஆடுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
செய்தியாளர்கள் அல்லு அர்ஜுன் இடம் உங்களுக்கு தமிழில் பிடித்த சிறந்த நடனமாடும் நடிகர் யார் என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த அல்லு அர்ஜுன் தமிழில் பல தலைமுறைகளைச் சேர்ந்த நல்ல நடனக் கலைஞர்கள் உள்ளார்கள். சீனியர்களில் கமல்ஹாசன் சார் இருக்கிறார். அடுத்தபடியாக விஜய், தனுஷ், சிம்பு நன்றாக நடனம் ஆடுவார்கள்.

சமீபத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. டாக்டர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக அதில் உள்ள ஹிட் பாடலான செல்லம்மா செல்லம்மா பாடல் மிகவும் பிடித்திருந்தது. அதில் சிவகார்த்திகேயன் நடன அசைவுகள் மிகவும் நன்றாக இருந்தது என்று கூறினார்.

Trending News