சமீபகாலமாக தென்னிந்திய நடிகர்கள் பலரும் தங்களுடைய படங்களை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் குறிப்பாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் படங்களை ரிலீஸ் செய்து இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாற வேண்டும் என்ற ஆசையில் வலம் வருகின்றனர்.
அதற்கு காரணம் அவர்கள் நடிக்கும் படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுவதால் அங்கே படத்தை நேரடியாக வெளியிட்டால் நல்ல வியாபாரம் பார்க்கலாம் என்ற நோக்கம்தான். ஆனால் அது ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே ஒர்க் அவுட் ஆகிறது.
அந்தவகையில் தாமும் இந்திய அளவில் பிரபல நடிகராக வசூல் மன்னனாக மாறிவிட வேண்டும் என கணக்கு போட்டு வேலை பார்த்த அல்லு அர்ஜுன் கனவில் மண்ணைப் போட்டு விட்டனர். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் நாள் வசூல் 70 கோடி என சிலாகித்துக் கொண்டாலும் அடுத்தடுத்த நாட்களில் சுத்தமாக வசூல் இல்லாமல் போய்விட்டது. அதுமட்டுமில்லாமல் படம் பார்த்த அனைவருமே முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் இரண்டாவது பாதியை சொதப்பி விட்டதாகவும் கூறுகின்றனர்.
முன்னதாக புஷ்பா படம் இரண்டு பாகங்களாக எடுக்க ஐடியா இல்லை எனவும் பாகுபலி, கேஜிஎப் போன்ற படங்களின் வெற்றியை பார்த்துவிட்டுத்தான் இந்த வேலையை செய்துள்ளதாகவும் தெலுங்கு வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதுதான் உண்மையும் கூட.
இதனால் கதையில் தேவையில்லாமல் சில விஷயங்களை உள்ளே செல்கிறேன் என இரண்டாம் பாதியை சொதப்பி கொண்டாடிவிட்டனர். இதனால் நினைத்ததும் வராமல் எதிர்பார்ப்பதும் கிடைக்காமல் செம அப்செட்டில் இருக்கிறாராம் அல்லு அர்ஜுன். இதனால் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க விறுவிறுப்பாக அமைய வேண்டும் என இயக்குனருக்கு கட்டளை போட்டு விட்டாராம்.