சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

Pushpa 2: யாரும் இங்க கொம்பன் இல்ல யாரும் பெரிய பிஸ்தா இல்ல.. வெளியானது புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள்

Pushpa 2: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் ஆகியோர் நடித்த புஷ்பா வசூல் வேட்டையாடியது. அதை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அல்லு அர்ஜுன் பிறந்த நாளுக்கு வெளியான அந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து இன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காகவே ரசிகர்கள் வெறித்தனமாக சோசியல் மீடியாவில் காத்திருந்தனர்.

புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள்

அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் புஷ்பா 2 பாடல் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. புஷ்பா புஷ்பா என தொடங்கும் இந்த பாடலில் அல்லு அர்ஜுன் கலக்கலாக நடனம் ஆடியுள்ளார்.

யாரும் இங்க கொம்பன் இல்ல, யாரும் பெரிய பிஸ்தா இல்ல, உனக்கு நீயே ராஜா கொண்டாடு போன்ற வரிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் பின்னணி இசையும் பொருத்தமாக இருக்கிறது.

இப்படி அனல் பறக்க வெளிவந்துள்ள இந்த பாடலை தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இதை அடுத்து விரைவில் அடுத்த அப்டேட் ஒன்று வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News