சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரஜினி ரஜினி தான், அல்லு அர்ஜுன் இன்னும் கத்துக்கணும்.. அசம்பாவிதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்

புஷ்பா 2 படம் நேற்று ரிலீஸ் ஆகி வசூல் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளிலே இந்த படம் 150 கோடிகள் வசூல் செய்துள்ளது. எப்படியும் இது ஆயிரம் கோடிகள் எட்டும் என கன்னட சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.

இதற்கிடையே FDFS என்னும் முதல் காட்சி ஹைதராபாத்தில் திரையிடப்பட்டது. இது ரசிகர்களுக்காக போடப்படும் பிரத்தியேக காட்சி. அங்கே சந்தியா திரையரங்கில் இந்த காட்சி ஒளிபரப்பப்பட்டது.

ஏற்கனவே தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. இதிலும் திடீரென அல்லு அர்ஜுன் அங்கே படம் பார்க்க வந்ததால் வழக்கத்திற்கு மாறாக ரசிகர்களால் மிகப்பெரிய தள்ளும் முழு ஏற்பட்டது. இதனால் குழந்தைகளை கூட்டிட்டு வந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.

முன்னறிவிப்பு ஏதுமின்றி அல்லு அர்ஜுன் வந்தது தான் இதற்கு காரணம் என அவர் மீது கிரிமினல் கேஸ் போலீஸ் பதிவு செய்துள்ளனர்.

அல்லு அர்ஜுன் படங்களை போல தமிழ்நாட்டில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரும் திரையரங்கு சென்று படம் பார்ப்பார். ஆனால் அவர் வந்து போனது யாருக்கும் தெரியாது.

ரஜினி என்ற அடையாளத்தையே மாற்றி மாறு வேடத்தில் வருவார். தலப்பாகை அணிந்தும், முகக்கவசம் போட்டுக் கொண்டும், இவர் ரஜினி தான் என்று யாரும் கண்டுபிடிக்காத வகையில் வந்து பார்த்து செல்வார். இப்படி அல்லு அர்ஜுனும் ரஜினியை போல் கற்றுக் கொள்ள வேண்டும் என அனைவரும் கூறி வருகிறார்கள்.

Trending News