வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஏற்கனவே டிஆர்பி மண்ணை கவ்விடுச்சே.. இதுல கண்டெண்ட் கொடுக்கும் பஜாரியை கழட்டி விடும் பிக் பாஸ்

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வார வாரம் ஒரு நபர் கமலஹாசன் முன்னிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார். அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாகவே ரசிகர்கள் யூகிக்கும் நபர்களை தவிர வேறு யாராவது எலிமினேட் செய்து ஆச்சரியப்படுத்துகின்றனர்.

அதேபோன்றுதான் இந்த வாரமும் எதிர்பாராத பிக் பாஸ் போட்டியாளர் ஒருவர் எலிமினேட் ஆக போகிறார். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி டிஆர்பி-யில் மண்ணை கவ்வி இருக்கும் இந்த சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கன்டென்ட் கொடுக்கும் கண்டஸ்டண்ட் ஆக கருதப்படும் போட்டியாளரை வெளியேற்றுவது விஜய் டிவிக்கு பின்னடைவை தரப்போகிறது.

Also Read: சீரியல்ல தான் குடும்ப குத்து விளக்கு.. வாய்ப்புக்காக கிளாமரில் குதித்த சன் டிவி பிரபலம்

முன்பு அரசியலில் ஆர்வம் காட்டியது போல், இப்போது மறுபடியும் அரசியலில் தீவிரம் காட்டுகிறார் கமலஹாசன். இதனால் வரும் சனிக்கிழமை ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு டெல்லி கிளம்புகிறார். இதனால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையின் எபிசோடுக்கான சூட்டிங் வெள்ளிக்கிழமையே நடந்து முடிந்து விடும்.

ஆகையால் வெள்ளிக்கிழமை அன்று யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போகப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி விடும். இவ்வாறு கமலஹாசன் டெல்லி செல்ல உள்ளதால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் விஜய் டிவி உள்ளது.

Also Read: விக்ரமனை மட்டம் தட்டும் விஜய் டிவி.. மக்களுக்காக குரல் கொடுத்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

இதில் இதுவரை நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறாத சிவின் மற்றும் விக்ரமன், அசீம், ரட்சிதா மகாலட்சுமி, தனலட்சுமி, கதிரவன், மைனா உள்ளிட்ட 7 பேர் கடந்த திங்கட்கிழமை அன்று ஓப்பன் நாமினேட் செய்யப்பட்டனர். ஆகையால் வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் படப்பிடிப்பில் இந்த சீசனில் ஜனனியை தொடர்ந்து அடுத்து யார் வெளியே போகிறார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த சீசனில் கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளராக கருதப்பட்ட தனலட்சுமி மற்றும் சிவில் ஆகிய இரண்டு பேரில் ஒருவர் தான் வெளியேறப் போகிறார்கள். அதிலும் தனலட்சுமி நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து பஜாரி போல் போல் சண்டை போடும் தனலட்சுமி பலரும் வெறுப்பதால் அவதான் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் பிக் பாஸ் டிஆர்பி தான் கண்டமாக போகிறது.

Also Read: முன்கூட்டியே நடத்தப்படும் பிக் பாஸ் எலிமினேஷன்.. அடுத்த சவாலுக்கு அவசர அவசரமாக கிளம்பும் ஆண்டவர்

Trending News