வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஓவர் ஆக்டிங், டிஆர்பியை படுக்கப்போட்ட ராஜா ராணி 2.. சரவணனுக்கு சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு நெஞ்சுவலி

விஜய் டிவியில் சீரியல்களின் டிஆர்பி எப்பொழுதுமே முதலிடத்தில் இருக்கும். அந்தவகையில் சஞ்சீவ், ஆலியா மானசா இருவரும் நடித்த மக்களின் மனம் கவர்ந்த தொடராக இருந்தது ராஜா ராணி. இந்த தொடரில் நடிக்கும்போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

ஹிந்தி சீரியலை மொழிபெயர்க்கப்பட்டு என் கணவன் என் தோழன் என்ற பெயரில் விஜய் டிவியில் ஒளிபரப்பப் செய்யப்பட்டது. இத்தொடர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதோடு இதே கதைக்களத்தை கொண்டு தற்போது தமிழ் நடிகர்களை வைத்து ராஜா ராணி 2 சீரியல் எடுக்கப்படுகிறது. இத்தொடரில் சரவணனாக சித்துவும், சந்தியாவாக ஆல்யா மானசாவும் நடிக்கிறார்கள்.

இதில் சரவணன் இனிப்பு கடை வைத்துள்ளார். அவரது மனைவி சந்தியா ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆரம்பத்தில் ஆல்யாவின் கதாபாத்திரம் மாமியாரிடம் நல்ல பெயர் வாங்க துடிக்கும் மருமகளாக மிகவும் சாதுவாக இருந்தது. இவ்வாறு மந்தமாக சென்று கொண்டிருந்த தொடரை இயக்குனர் டிஆர்பி ஏற்றுவதற்காக பல ட்விஸ்ட்களை கொண்டு வந்துள்ளார்.

இத்தொடரில் சமையல் போட்டிக்காக சரவணனும், சந்தியாவும் சென்னை செல்கிறார்கள். அங்கு எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது. விபத்து ஏற்படுத்திய காரை சந்தியா துரத்திச் செல்கிறார். அங்கு சென்று ரவுடிகளை சந்தியா அடிப்பது போல் காட்சி எடுக்கப்படுகிறது.

அதில் ஆல்யாவின் நடிப்பை பார்த்து சித்துக்கு ஆச்சரியமாக இருந்தது. இதனால் இத்தொடர் சூடுபிடிக்கும் என இயக்குனர் நினைத்த நிலையில் ஆல்யாவை நெட்டிசன்கள் வறுத்து எடுக்கிறார்கள். சரவணன் மீனாட்சி தொடரால் முதலில் இருந்த விஜய் டிவியின் டிஆர்பி தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டது.

alya-manasha-raja-rani-2
alya-manasha-raja-rani-2

Trending News