புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆல்யா மானசா கர்ப்பம் பற்றி மோசமாக வந்த செய்தி.. கடுப்பான கணவர் சஞ்சீவ்

சின்னத்திரையில் ரசிகர்களிடையே பிரபலம் ஆன ஜோடியாக வலம் வருபவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. இருவரும் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்த போது காதல் வயப்பட்டு பின்னாளில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐலா என்ற குழந்தை உள்ளது.

தற்போது ஆலியா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். சூப்பர் ஹிட்டடித்த சீரியல் இன் தமிழ் ரீமேக்காக இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் ஆல்யா மானசாவுக்கு ஜோடியாக சித்தார்த் என்பவர் நடித்து வருகிறார்.

அதேபோல் சஞ்சீவ் தற்போது விஜய் டிவியிலிருந்து சன் டிவிக்கு சென்று அங்கு கயல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இன்றைய தேதிக்கு சன் டிவியில் அதிக டிஆர்பி பெரும் சீரியல் என்றால் அது கயல் சீரியல் தான். இப்படி கேரியரின் உச்சத்தில் இருக்கும் சஞ்சீவ் மற்றும் ஆலியா இருவரும் மீண்டும் பெற்றோர்களாக உள்ளனர்.

அதை ஒரு பேட்டியில் சஞ்சீவ் ஆலியா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதைக் கேள்விப்பட்ட சில பத்திரிகையாளர்கள் தங்களுடைய பத்திரிகைகளில் ஆலியா மானசா விரைவில் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகப் போவதாக தகவல்களை பரப்பி விட்டனர்.

இதனால் கடுப்பான சஞ்சீவி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் யார்ரா நீங்க எல்லாம் நான்சென்ஸ் என திட்டி உள்ளார். தொடர்ந்து இது குறித்து வதந்திகள் வரும் நிலையில் சஞ்சீவ் அதற்கெல்லாம் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகை கர்ப்பமானது குத்தமா.

alya-manasa
alya-manasa

Trending News