ஹிந்தி சீரியலை டப்பிங் செய்து என் கணவன் என் தோழன் என்ற பெயரில் விஜய் டிவி ஒளிபரப்பு செய்தது. இத்தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இந்த தொடரை தமிழ் நடிகர்கள் கொண்டு ரீமேக் செய்ய விஜய் டிவி திட்டமிட்டது. ஆல்யா, சஞ்சீவ் நடித்த ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகமான ராஜா ராணி 2 தொடர் என் கணவன் என் தோழன் கதையை ரீமேக் செய்யப்பட்டது.
ராஜா ராணி 2 தொடரில் சின்னத்திரை நடிகர்களான சித்து, ஆலியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். விஜய் டிவி தொடர்கள் என்றாலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெரும். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே ராஜா ராணி 2 தொடர் பின்தங்கி தான் உள்ளது.
இத்தொடரை மக்களிடையில் கொண்டு சேர்ப்பதற்காக இயக்குனர் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறார். இந்நிலையில் இத்தொடரின் கதாநாயகனான சரவணன் இனிப்பு கடை வைத்துள்ளார். இவரின் மனைவி சந்தியா ஐஏஎஸ் படித்து இருக்கிறாள் என்பதை தெரியாமலே திருமணம் செய்து கொள்கிறார்.
உள்ளூரில் இனிப்பு கடை வைத்திருக்கும் சரவணன் உலகம் முழுவதும் தெரியவேண்டும் என்பதற்காக சென்னையில் நடைபெறும் சமையல் போட்டிக்கு சரவணனை அழைத்து செல்கிறார் சந்தியா. ஒவ்வொரு கட்டங்களாக நடைபெற்ற சமையல் போட்டியில் சரவணன் ஜெயித்து கடைசி சுற்றுக்கு வந்துள்ளார்.
சரவணன் சமையல் போட்டியில் ஜெயிப்பதை பார்ப்பதற்காக, சரவணனுக்கு தெரியாமல் சந்தியா டிக்கெட் போட்டு சரவணன் குடும்பத்தை சென்னை வரவழைக்கிறார். இதேபோல் சென்றமுறை சரவணன் குடும்பமாக வெளியூர் சென்றபோது, டிஆர்பி நம்பர் ஒன்னாக உள்ள பாரதி கண்ணம்மா தொடருடன் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனால் ராஜா ராணி 2 தொடர் மக்களிடையே வரவேற்பை பெறும் என்பதால் மகா சங்கமம் செய்யப்பட்டது. இவ்வாறு ராஜா ராணி 2 இயக்குனர் பல உத்திகளைக் கையாண்டாலும் இத்தொடர் டிஆர்பி இல் பின்தங்கி தான் உள்ளது. மறைமுகமாக தனது குடும்பத்திற்கு டிக்கெட் போட்டு சென்னை வரவழைக்கிறார் சந்தியா. சரவணனுக்கு இந்த விஷயம் தெரியாதவாறு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதுதான் கதையாம். இப்படி பத்து வருடத்திற்கு பின்னாடி போய் கதையை யோசித்து உருட்டி வருகிறார் இயக்குனர் என்று கலாய்த்து வருகின்றனர்.