திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மீண்டும் சீரியலில் நடிக்கப் வரும் ஆலியா.. இந்த வாட்டி விஜய் டிவிக்கு ஆப்பு

சின்னத் திரை ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக இருக்கும் ஆலியா மானசா, ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்த பிறகு டாப் சீரியல் ஹீரோயின் லிஸ்டில் இருந்தார். இவர் ராஜா ராணி சீரியலில் கூட கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவியின் டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னிலையில் இரண்டாம் பிரசவத்திற்கு பிறகு ஆலியா மானசா, ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகி தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க தயாராகி உள்ளார்.

Also Read: சந்தியாவிற்கு டஃப் கொடுக்க போகும் ஆலியா.. பிரசவத்திற்கு பின் மகா சங்கமத்தில் ரீ-என்ட்ரி

இதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறுவதற்காக தீவிர உடற்பயிற்சியில் இருக்கும் ஆலியா மானசா, இந்த முறை விஜய் டிவியின் சீரியல்களுக்கு கம்பி நீட்டி விட்டு, சன் டிவி சீரியலில் கணவனுடன் ஒரே சேனலில் கலக்க வேண்டும் என்பதற்காக கிளம்பிவிட்டார்.

இந்த புத்தம்புது சீரியலில் ஆலியா மானசாவிற்கு ஜோடியாக யார் வருவார் என ரசிகர்கள் யூகித்து கொண்டிருக்கின்றனர். இனிமேல்தான் இந்த சீரியலின் முழுவிபரமும் வெளியாகும். இவருடைய மகள் அய்லா செய்யும் குறும்பு சேட்டையும், பிறந்து சில மாதங்களே ஆன அர்ஷ் என்ற ஆண் குழந்தையின் அட்ராசிட்டி என்றும் தற்போது சோசியல் மீடியாவில் அப்லோட் செய்து கொண்டிருக்கிறார்.

Also Read: ஆலியா மானசாவை ஓரங்கட்டிய அர்ச்சனா.. சைடு போஸில் வைரலாகும் புகைப்படங்கள்

இதுமட்டுமின்றி இது தான் செய்யவேண்டும் என்பது இல்லாமல் இஷ்டத்திற்கு கார் டூர், பிரிட்ஜ் டூர் என்ற பெயரில் வீட்டிலுள்ள தூசி துரும்பை எல்லாம் சுற்றிக் காண்பித்து தனித்தனியாக வீடியோ போட்டு இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே ஆலியாவின் புருஷன் நடிக்கும் கயல் சீரியல் டிஆர்பி டாப் லிஸ்டில் இருந்து விஜய் டிவி டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது பொண்டாட்டியும் சேர்ந்து கொண்டு விஜய் டிவியின் டிஆர்பி-க்கு ஆப்பு வைத்துள்ளார்.

Also Read: சஞ்சீவ்-ஆலியாவை தொடர்ந்து ஜோடி சேரும் விஜய் டிவி பிரபலம்.. யாருக்கும் தெரியாமல் நடந்த நிச்சயதார்த்தம்

Trending News