திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஒரே படத்தினால் கேரியர் முடிந்துவிடும் என நொந்து போன அமலாபால்.. 11 வருடம் கழித்து தெரியவந்த உண்மை

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் வெற்றிக்காக தடுமாறிக் கொண்டிருந்தவர்தான் அமலாபால். அதன் பிறகு தனது நடிப்பு திறனை மூலம் தனக்கென சினிமாவில் ஒரு ஓரமாக இடம் பிடித்தார்.

அமலாபால் முதலில் நீலத்தாமரை என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அதன் பிறகு வீரசேகரன் என்ற தமிழ் படத்தில் நடித்தார்.

இப்படி ஒரு படம் இருப்பதே பல ரசிகர்களுக்கு தெரியாமல் இந்த படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. அதன் பிறகு என்ன செய்வதென்று தெரியாமல்லிருந்த அமலாபால் திடீரென கவர்ச்சியில் குதித்தார்.

அந்தத் திரைப்படம் தான் சிந்து சமவெளி, அமலாபால் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வந்துவிடும் சிந்து சமவெளி திரைப்படம். ஏனென்றால் அந்த அளவுக்கு தனது கவர்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார், படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

amala paul
amala paul

முதலில் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் இனிமேல் சினிமா கேரியர் முடிந்துவிடும் என அமலாபால் பயந்து கொண்டிருந்தார். ஆனால் அதன் பிறகு அமலாபால் நடிப்பில் வெளியான மைனா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்தார்.

அதன்பிறகு தான் மைனா புகழ் அமலா பால் என அழைத்தனர். அப்போது சிந்து சமவெளி படக்குழு இந்த சமயத்தில் படத்தை ரி ரிலீஸ் செய்தால் நஷ்டமடைந்த பணத்தை எடுத்துவிடலாம் முடிவு செய்து என படத்தை ரிலீஸ் செய்தனர்.

இதற்கு அமலாபால் என்னை விட்டு விடுங்கள் இந்தப்படம் வெளியானால் என்னுடைய சினிமா கரியர் போய்விடும். அதனால் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என கூறியுள்ளார். அதன் பிறகு சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் தப்பித்துக் கொண்டார்.

Trending News