வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இது என்னப்பா ஒரு நாள் வயிறு வீங்குது, மறுநாள் ஸ்லிம்மாகுது! உச்சகட்ட சந்தேகத்தை கிளப்பும் அமலா பால்

Amala Paul: தமிழ் சினிமாவில் ஓஹோ என்று வந்திருக்க வேண்டிய நடிகை தான் அமலா பால். மைனா, தெய்வத்திருமகள், தலைவா என அடுத்தடுத்து படங்களை இறக்கி முன்னணி ஹீரோயின் ஆக வந்து கொண்டிருந்தார்.

ஆனால் சினிமா எனக்கு முக்கியமில்லை, எனக்கான துணை சரியாக அமைந்துவிட்டது என்று சொல்லி சினிமாவுக்கு முழுக்கு போட நினைத்தார். உண்மையில் அமலாபால் மற்றும் ஏ எல் விஜய் ஜோடி ஆகச்சிறந்த தம்பதிகளாக தான் நமக்கு தெரிந்தார்கள்.

யார் கண் பட்டதோ என்னவோ தெரியவில்லை இவர்களுடைய திருமண வாழ்க்கை குறுகிய காலகட்டத்தில் முடிந்து விட்டது. ஒரு சில ஜோடிகளை போல் பிரிவு என்றது வந்ததும் ஒருத்தருக்கு ஒருத்தர் குறை சொல்லவில்லை அமலாபால் மற்றும் விஜய்.

இயக்குனர் ஏ எல் விஜய் ஐஸ்வர்யா என்னும் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு அப்பாவாக ஆனார். ஆனால் அமலா பால் மீண்டும் சினிமா கை கொடுக்கும் என்று நம்பி வந்து ஏமாந்து போனார் என்று கூட சொல்லலாம்.

ஆசைப்பட்ட வாழ்க்கையும் இல்லை, கைகொடுக்க சினிமாவும் இல்லை என தெரிந்த பிறகு கால் போன போக்கில் தன்னுடைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். இதற்கிடையில் அவருக்கு ஒரு காதல் தோல்வியும் ஏற்பட்டது.

சமீபத்தில் தான் ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக அறிவித்திருந்தார். அறிவிப்பு வந்து ஒரு வாரத்திலேயே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே அமலா பால் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

கர்ப்பமாகி மூன்று மாதத்திற்கு மேல் தான் நிறைய பெண்களுக்கு வயிறு காட்டி கொடுக்கும். ஆனால் அமலாபால் மட்டும் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் புகைப்படத்திலேயே அவருக்கு வயிறு பெரிதாகத்தான் இருந்தது.

கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு மாத குழந்தை வயிற்றில் இருப்பது போல் தான் நேற்று வரை அமலா பால் சுற்றிக் கொண்டிருந்தார். ஆனால் இன்று அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் சிக்கென இருக்கிறது அவருடைய வயிறும், இடுப்பும்.

இது என்னடா நேத்து வர நிறைமாத கர்ப்பிணியா சுத்திட்டு இருந்தாங்க, திடீர்னு எப்படி இப்படி என நெட்டிசன்களுக்கு குழப்பம் வந்திருக்கிறது. பணக்காரன் படத்தில் வயிற்றில் சாராயத்தை கட்டிக்கொண்டு அம்பிகா சுற்றுவார். இது தெரியாமல் ரஜினிகாந்த் தலையை பிச்சுகிட்டு சுத்துவார்.

அப்படித்தான் கொஞ்ச நேரம் அமலாபால் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பார்க்கும் போது இருந்தது. அப்புறம் தான் அவர் போட்ட கேப்டன் கண்ணில் தெரிந்தது.

அட ஆரஞ்சு கலர் சொக்காயில் அல்வா போல் இருக்கும் அமலாபாலின் அந்த புகைப்படம், த்ரோ பேக் புகைப்படம் என்று. இது என்னடா அடிக்கிற வெயில இது வேற நொந்து போய் இருக்கிறார்கள் இன்ஸ்டா வாசிகள்.

Trending News