தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை அமலாபால். சினிமாவில் முன்னணியில் இருக்கும் போதே பிரபல இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
ஆனால் அதன்பிறகு சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று தற்போது சினிமாவில் மீண்டும் நடித்து வருகிறார். ஆனாலும் அவருக்கு கிடைத்த படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவியது. இருந்தாலும் மனம் தளராத அமலாபால் எப்படியாவது சினிமாவில் முன்னேறி விட வேண்டும் என்று தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் அவர் ரசிகர்களை கவரும் வண்ணம் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி மற்றும் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். இதனால் அவருக்கு எதிராக பல கருத்துக்களும் வந்த வண்ணம் உள்ளன.
ஆனாலும் அதைப் பற்றி கவலைப்படாத அமலாபால் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கையில் சரக்கு கிளாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் தான் துபாய்க்கு செல்வதாக குறிப்பிட்டு கையில் மதுபானத்துடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் அவருக்கு விமான பணிப்பெண் கிளாஸில் சரக்கு ஊற்றும் மற்றொரு போட்டோவையும் வெளியிட்டுள்ளார். அவரின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் திருந்தவே மாட்டியா என்பது போன்ற நெகட்டிவ் கமெண்ட்களை அளித்து வருகின்றனர்.
சமீபகாலமாக சினிமா நடிகைகள் அனைவரும் ஏதாவது ஒரு மதுபானத்தை விளம்பரம் செய்யும் பொருட்டு கையில் கிளாஸ் உடன் போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் கூட நடிகை காஜல் அகர்வால், ராய்லட்சுமி, இலியானா உள்ளிட்டோர் முன்னணி கம்பெனியின் மதுபானத்தை விளம்பரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
