திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஆடை இல்லாமல் நடித்து ஆன்மீகவாதியாக மாறி அமலாபால்.. எது செஞ்சாலும் குத்தமா!

தமிழ் சினிமாவிற்கு சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்தது, வெகு சீக்கிரம் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலாபால் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து டாப் ஹீரோயின் லிஸ்டில் இடம்பிடித்தார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட அமலா பால் மட்டுமல்லாமல் தமிழில் தெலுங்கு திரைப்படங்களிலும் கால் பதித்த எக்கச்சக்கமான தெலுங்கு ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார். அதுமட்டுமின்றி தமிழில் முன்னணி கதாநாயகர்களாக விஜய், தனுஷ், ஆர்யா உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொண்டார்.

அதன் பிறகு இயக்குனர் ஏ எல் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, சில வருடங்களிலேயே கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்று விட்டார். அமலாபால் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவில் அதற்கான கதையை தேடிக்கொண்டிருக்கிறார்.

amala-cinemapettai9
amala-cinemapettai

இன்னிலையில் ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்த பெரும் சர்ச்சையை கிளப்பிய அமலாபால், அதன்பிறகு சோசியல் மீடியாக்களில் சரக்கு பாட்டில் உடனும், ஆண் நண்பர்களுடனும் இன்ஸ்டாகிராமில் எக்கச்சக்கமான புகைப்படத்தை பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

ஆனால் தற்போது முற்றிலும் மாறி உள்ள அமலாபால், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்திப் பரவசத்துடன் கோவிலில் வழிபாடு செய்து திரும்பியுள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இவர் வட இந்தியாவில் பிரபலமான துர்க்காதேவி கோவிலில் வழிபாடு செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.

amala-paul-cinemapettai11
amala-paul-cinemapettai

ஏனென்றால் எப்போதுமே சோசியல் மீடியாவில் கவர்ச்சிகரமான புகைப்படத்தையே பதிவிடுவதில் ஆர்வம் காட்டும் அமலா பால், முற்றிலும் ஆன்மீகவாதியாக மாறியிருப்பதை நெட்டிசன்கள் இஷ்டத்திற்கு கிண்டல் அடிக்கின்றனர். ஆடை இல்லாமல் நடித்து ஆன்மீகவாதியாக மாறிய அமலா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News