திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கையில் சரக்கு பாட்டிலுடன் ஆட்டம் போட்ட அமலாபால்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த அமலா பால் தற்போது கையில் சரக்கு பாட்டிலுடன் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது. அமலாபால் தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்.

தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் மைனா திரைப்படத்தின் மூலம் அமலாபாலுக்கு தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைத்தது. மைனா படத்திற்கு பிறகு ஏஎல் விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள் படத்தில் நடித்தார்.

இப்படத்திற்கு பிறகு அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 3 வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர். ஏ எல் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. அதற்கு அமலாபால் வாழ்த்து தெரிவித்தார்.

அமலாபாலுக்கு ஆடை திரைப்படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படம் எதுவும் சரியாக ஓடவில்லை. அதனால், தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்தார். அண்மையில் அவரது சகோதரர் அபிஷேக் பாலுக்கு திருமணமாகப் போறதா தன் குடும்பத்தோடு எடுத்த வீடியோவை பதிவிட்டிருந்தார்.

இப்போது திருமணத்திற்கான பேச்சிலர் பார்ட்டியில் அமலாபால் குடித்துவிட்டு கையில் சரக்கு பாட்டிலுடன் சகோதரர், அவருடைய வருங்கால மனைவி மற்றும் நண்பர்களுடன் குத்தாட்டம் போடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அமலாபாலை திட்டி வருகின்றனர்.

amala-paul-viral-video
amala-paul-viral-video

Trending News