தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தான் அமலாபால். வரிசையாக தெய்வத்திருமகள், தலைவா போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்தும் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் திக்குமுக்காடி கொண்டிருந்த அமலாபாலுக்கு மீண்டும் ஆடை படம் கை கொடுத்தது என்றே கூறலாம்.
இந்த படத்தில் இவர் துளியும் ஆடை இல்லாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதன் மூலம் இவருக்கு பல சர்ச்சைகள் வந்தாலும் ரசிகர்கள் ஆடை படத்தின் நடிப்பை பார்த்து அமலாபாலை வெகுவாக பாராட்டினர்.
ஒரு நல்ல பெண்ணாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அமலா பால் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. சமீபகாலமாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை மட்டுமே தான் வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலோ அல்லது வீட்டில் சும்மா இருந்தால் ஒரு போட்டோவை எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களிடம் அடிக்கடி தன்னை அறிமுகபடுத்தி கொள்கிறார். அதற்கு காரணம் சமீப காலமாக அமலாபாலுக்கு எந்த பட வாய்ப்பும் வருவதில்லை அதனாலதான் இந்த மாதிரி எல்லாம் செய்கிறார் என சினிமா வட்டாரத்தில் கூறுகின்றன.

தற்போது அமலா பால் அவரது சமூக வலைப்பக்கத்தில் வயோகி என்னும் பெயரிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்துவருகின்றனர்.