சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.
அதன்பிறகு வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்த அமலாபாலுக்கு மைனா படம் கை கொடுத்தது. இவரது நடிப்பை பார்த்து பல ரசிகர்களும் அமலாபாலை பாராட்டி தள்ளினர் என்றே கூறலாம்.
இன்றளவும் இவரது திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இருப்பது மைனா படம் தான். அதன் பிறகு தெய்வத்திருமகள் மற்றும் தலைவா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களும் நடிக்க ஆரம்பித்தார்.
இயக்குனர் விஜய் உடன் காதல் ஏற்பட இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே விவாகரத்து செய்தார். இது ரசிகர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமலாபால் ஏற்கனவே அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஒரு புகைப்படம் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
அந்த புகைப்படத்தில் அவர் நீரில் நினைந்த படி கடற்கரையில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.