திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பட வாய்ப்புகள் இல்லாததால் முற்றும் துறந்த முனிவராக மாறிய அமலாபால்.. வைரலாகும் யோகா புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார்.

என்னதான் அமலா பால் அறிமுகமானது மலையாள திரையுலகில் என்றாலும், தமிழில் ‘மைனா’ படத்தில் நடித்ததின் மூலம் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார். இதனைத் தொடர்ந்து தனுஷ், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் அமலா.

மேலும் சமீபத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. ஏனெனில் அந்த படத்தில் அமலாபால் ஆடையில்லாமல் நடித்திருப்பார்.

தற்போது நடிகை அமலாபால் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்த நிலையில் தற்போது அமலாபால் நடத்தியுள்ள ஹாட்டான போட்டோ ஷூட்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களின் கண்களைக் குளிர வைக்கிறது.

amala-paul-2
amala-paul-2

ஆடை படத்திற்கு பின் படவாய்ப்புகள் குறைந்து தற்போது சன்னியாசியாக மாறி வருகிறார் அமலாபால். இவர் யோகா செய்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

amala-paul-1
amala-paul-1

Trending News