வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நடிப்பை தூக்கிப்போட்டு களத்தில் குதித்த அமலாபால்.. பணத்தாசையால் புது அவதாரம்

பல துணிச்சலான கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து இருப்பவர் நடிகை அமலா பால். அவர் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். முன்னணி கதாநாயகியாக இருக்கும்  பொழுதே இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த வேகத்திலேயே விவாகரத்தும் செய்தார்.

இதையடுத்து பல திரைப்படங்களிலும், வெப் தொடர்களில் நடித்து எப்போதும் பிஸியாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அமலாபால் அவ்வப்போது ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு இளைஞர்களை திக்குமுக்காட வைப்பார்.

தற்போது இவர் தனது சொந்த தயாரிப்பில் “கடாவர்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அனுப் எஸ் பணிக்கர் இயக்கியுள்ளார். அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அமலாபாலின் பிறந்த நாளான இன்று இப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பிணவறையில் அமர்ந்து அமலா பால் உணவை உண்ணுவது போன்று வெளியாகியுள்ள போஸ்டர் மிரட்டலாக உள்ளது. இந்த போஸ்டரை நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து அவரை பாராட்டியுள்ளார்.

amalapaul-cinemapettai
amalapaul-cinemapettai

அமலாபால் இப் படத்தில் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக நடித்துள்ளார். இதற்காக அவர் மருத்துவமனையில் ஒரு வாரம் பயிற்சி பெற்றுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் அதுல்யா ரவி, ரித்விகா, ஹரிஷ் உத்தமன் போன்ற பல பிரபலங்களும் நடித்துள்ளனர். இப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஆனால் சினிமாவில் இருப்பவர்கள் பலரும் நடிப்பை விட தயாரிப்பில் தான் அதிகமான வருமானம் கிடைக்கின்றன. அதனால் தான் அமலா பால் நடிப்பை விட தயாரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளதாக அவரது சினிமா நண்பர்கள் கூறி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் அமலாபால் வைத்து படங்கள் தயாரிப்பதற்கு பெரிய அளவில் தயாரிப்பாளர்கள் முன்வராததால் இவரே தான் நடிக்கும் படங்களை தயாரித்து வருவதாகவும் ஒரு சிலர் கூறிவருகின்றனர்.

Trending News