சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கல்யாணமான கையோடு அமலாபால் போட்டிருக்கும் பதிவு.. புலம்பித் தவிக்கும் நெட்டிசன்கள்

Amala Paul: நடிகை அமலா பால் சினிமாவில் சரியான பாதையை தேர்ந்தெடுத்து பயணித்திருந்தால் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்திருக்க வேண்டியவர். ஆரம்ப காலங்களில் ஒரு சில படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியை பார்த்து முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர், இயக்குனர் ஏ எல் விஜயுடன் காதல் ஏற்பட்டு உடனடியாக திருமணமும் செய்தார். எந்த வேகத்தில் திருமணம் செய்தாரோ அதே வேகத்தில் விவாகரத்தும் பெற்றார்.

கணவனை கைவிட்டு விட்டு சினிமாவை நம்பி வந்த அமலா பாலுக்கு தனுஷ் ஒன்று, இரண்டு பட வாய்ப்புகளை கொடுத்தார். ஆனால் அவருக்கு சினிமா கை கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதிலும் ஆடை படத்திற்கு பிறகு அமலா பாலுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு வெகுவாக குறைந்து விட்டது. இப்போதைக்கு அவர் பீல்ட் அவுட் ஆன நடிகை தான்.

இதற்கிடையில் அமலா பால் பஞ்சாப் பாடகர் பவ்னீந்தர் சிங் என்பவரை காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார். இருவருக்கும் திருமணம் ஆனது போல் புகைப்படம் எல்லாம் வெளியானது. ஆனால் சில மாதங்களிலேயே அமலாபால் தங்களுடைய காதல் உறவு முறிந்து விட்டதாகவும், அந்த போட்டோ சூட் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது, எனக்கு அவருடன் திருமணம் ஆகவில்லை என்று சொல்லி இருந்தார்.

Also Read:முதலாளியாக வேண்டும் என்ற பேராசையில் மொத்த சொத்தையும் இழந்த 5 நடிகைகள்.. வளர்ப்பு பையனால் நஷ்டமடைந்த ஆச்சி

அதன்பின்னர் அமலா பால் டீச்சர், கிறிஸ்டோபர் போன்ற படங்களில் நடித்தார். மலையாள சினிமா உலகில் பிசியாக இருந்த அமலா பால், தொடர்ந்து நிறைய நாடுகளுக்கு பயணம் செய்து வந்தார். யோகா, டிராவலிங் என தன்னுடைய வாழ்க்கையை அனுபவித்து வாழ தொடங்கிய அமலாபால் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தன்னுடைய அப்டேட்டுகளையும் கொடுத்து வந்தார்.

அமலா பால் சொன்ன குட் நியூஸ்

இதற்கிடையில் கடந்த அக்டோபர் மாதம் தன்னுடைய பிறந்தநாள் அன்று அவருடைய டிராவலிங் பார்ட்னர் ஜெகத் தேசாய் தன்னை ப்ரபோஸ் செய்தது மற்றும் அந்த காதலுக்கு ஓகே சொன்ன புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அமலாபால் கடந்த நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து நேற்று தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

அமலா பாலின் இந்த பதிவுக்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். அதே நேரத்தில் திருமணம் ஆகி 2 மாதத்தில் இப்படி ஒரு குட் நியூஸ் வாய்ப்பில்லை என வழக்கம் போல் அமலா பாலை சர்ச்சைக்குள்ளும் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். எது எப்படியோ அமலா பால் தன்னுடைய திருமண வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருப்பது நல்ல முடிவு தான்.

Amala pregnancy
Amala pregnancy

Also Read:ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி.. அருணாச்சலம் ஷூட்டிங்கில் நடந்தது என்ன.? பரபரக்கும் மீடியா

Trending News