சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பிரித்விராஜுக்கு நச்சுன்னு லிப்லாக் கொடுத்த அமலா பால்.. ரசிகர்களை வாயடைக்க வைத்த ட்ரெய்லர்

முன்பெல்லாம் படங்களில் இலை மறை காயாக காட்டப்பட்டு வந்த முத்த காட்சிகள் எல்லாம் இப்போது கண் கூச வைக்கும் அளவுக்கு காட்டப்படுகிறது. அதிலும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க யாரும் தயங்குவதே கிடையாது. அந்த வகையில் தற்போது வெளியான ஒரு ட்ரெய்லரில் அமலா பால் பிரித்விராஜுக்கு நச்சுன்னு கொடுத்த ஒரு லிப்லாக் காட்சிதான் பார்ப்பவர்களை வாயடைக்க வைத்திருக்கிறது.

தேசிய விருது இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சிகளும் படு மிரட்டலாக இருக்கிறது. அதிலும் இந்த படத்திற்காக முழு அர்ப்பணிப்பை கொடுத்துள்ள பிரித்விராஜை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.

Also read: சூர்யாவை இயக்கும் பிரித்விராஜ்.. கேட்டாலே தல சுத்துதுல்ல, யாரோட பயோபிக் தெரியுமா.?

அந்த அளவிற்கு ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு அவர் கேரக்டராகவே மாறி நடித்திருக்கிறார். அதனாலேயே இப்படம் சர்வதேச விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனதை கனக்க வைக்கும் வகையில் பல காட்சிகளைக் கொண்ட இந்த ட்ரெய்லரில் ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு லிப்லாக் காட்சியும் இடம் பெற்று இருக்கிறது.

எந்த கேரக்டராக இருந்தாலும் துணிந்து நடிக்கும் அமலா பால் இப்படத்தில் இப்படி ஒரு காட்சியில் நடித்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. ஆனால் பிரித்விராஜ் சமீப காலமாக இப்படிப்பட்ட லிப்லாக் காட்சிகளில் அதிகமாக நடிக்க ஆரம்பித்து விட்டாரே என்றுதான் பலரும் ஆச்சரியப்பட்டு போகிறார்கள்.

Also read: லோகேஷ் யூனிவர்ஸ் மூலம் போடும் மாஸ்டர் பிளான்.. 10 வருஷம் எதுவும் யோசிக்க மாட்டியா என ஆச்சரியப்பட்ட பிரித்விராஜ்

ஏனென்றால் சமீபத்தில் வெளியான பிரம்மம் திரைப்படத்தில் கூட அவர் ஹீரோயின் ராசி கன்னாவுக்கு நச்சுன்னு ஒரு லிப் லாக் கொடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து இப்படத்தில் அமலா பாலுடன் நெருக்கம் காட்டி நடித்திருக்கிறார். அந்த வகையில் சம்பந்தப்பட்ட அந்த காட்சி ஹாலிவுட் படத்தில் வருவது போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

நச்சுன்னு லிப்லாக் கொடுத்த அமலா பால்

amalapaul-liplock
amalapaul-liplock

இவ்வாறு அந்த முத்தக்காட்சி பரபரப்பை கிளப்பி இருந்தாலும் இப்படத்தில் கடின உழைப்பை கொடுத்து நடித்திருக்கும் பிரித்விராஜ் நிச்சயம் தேசிய விருதை பெறுவார் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இப்படி ட்ரெய்லரின் மூலமாகவே பாராட்டைப் பெற்று வரும் இப்படம் இந்த வருட கடைசியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: விஜய் உடன் நடிக்க மறுத்த பிரித்விராஜ்.. சூப்பர் ஹீரோவை தட்டி தூக்கிய லோகேஷ்

Trending News