புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சதுரங்க வேட்டை பாணியில் நடந்த மோசடி.. சர்ச்சையில் சிக்கிய அமலா ஷாஜி

Amala Shaji Scam: சதுரங்க வேட்டை பாணியில் சொல்ல வேண்டும் என்றால் நாம் சம்பாதிக்க வேண்டும் என்றால் மற்றவர்களின் ஆசையை தூண்ட வேண்டும். அப்படி அவர்களுக்கு ஆசை வந்து விட்டால் அதன் மூலம் நாம் அவர்களை மோசம் செய்து விடலாம் என்று அப்படத்தின் ஹீரோ நடராஜன் அனைத்து தில்லாலங்கடி வேலைகளையும் செய்து அனைவரையும் மோசடி செய்திருப்பார்.

அதே மாதிரி இன்ஸ்டாகிராம் மூலம் கிட்டத்தட்ட 4 மில்லியன் பாலோர்ஸ்களை வைத்திருக்கும் அமலா ஷாஜி ஒரு வீடியோவில் ப்ரோமோஷன் வீடியோவை போட்டு இருக்கிறார். அதில் ஆன்லைன் மணி கேம் மூலம் இரண்டு மடங்கு வருமானத்தை பெறலாம் என்று ஒரு அனனியா பாரக்ஸ் ஐடி மூலம் தொடர்பு கொள்ளுங்கள் என கூறியிருந்தார்.

இதை நம்பி ஒரு ஃபாலோவர் அந்த ஐடியை பின்பற்றி ஆயிரம் ரூபாய் முதலீடு  செய்திருக்கிறார். உடனே அவருக்கு 50 நிமிடத்திலேயே அந்த பணம் 15 ஆயிரம் ரூபாயாக க்ரிப்டோகரன்சி டிரேடிங்கில் மாறி இருக்கிறது. உடனே இதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பி மறுபடியும் 9000 ரூபாய் அனுப்ப வேண்டும். அதன்பின் எல்லாம் பணமும் உங்களுக்கு சேர்ந்து மொத்தமாக திருப்பி வந்து விடும் என்று அனன்யா போரக்ஸ் கணக்கில் இருந்து மெசேஜ் போயிருக்கிறது.

Also read: நெட்டிசன்களுக்கு சரியா தீனி போட்ட தளபதி.. வைரலாகும் புகைப்படம்

அதன் பின் உங்கள் பணம் 1.30 லட்ச ரூபாய் மதிப்பு கூடிவிட்டது. உங்களுக்கு தொடர்ந்து லாபம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் நீங்கள் சர்வீஸ் சார்ஜ் 19 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அந்த நபர் என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை என்று கூறியதும் சரி ஓகே 16 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் போதும் என்று வாங்கி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து க்ரிப்டோகரன்சி கணக்குக்கு வரி உண்டு. அதனால் நீங்கள் ஒரு 31,000 அனுப்ப வேண்டும் என்று மறுபடியும் கேட்டிருக்கிறார். உடனே அந்த நபர் என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை நான் கொடுத்த 26 ரூபாய் என்னிடம் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டிருக்கிறார். உடனே அனன்யா போரக்ஸ்லிருந்து உங்களுக்கு ரீபண்ட் செய்து விட்டோம் 30 நாட்களுக்குள் உங்கள் கணக்கிற்கு பணம் வந்துவிடும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அதன்பின் அந்த அக்கவுண்ட்டை க்ளோஸ் ஆகிவிட்டது.

பொய்யான கணக்குகளை தொடங்கி அதன் மூலம் டிரேடிங் செய்து பல கோடி பணங்களை சம்பாதித்து பலரையும் ஏமாற்றி இருக்கிறார்கள். இதில் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ பேர் பாதிப்படைந்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது ஒரு ஐடி ஊழியர் மட்டும் இதில் மோசடி நடந்திருக்கிறது என்று நான் அதில் ஏமாந்து விட்டேன் என புகார் அளித்துள்ளார். இப்படி தவறாக ப்ரமோஷன் செய்த அமலா ஷாஜி மீது தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Also read: பொங்கலுக்கு ரிலீசான தனுஷின் 5 படங்கள்.. மூன்று தோல்வி படங்களை தொடர்ந்து கேப்டன் மில்லர் வெற்றி பெறுமா?

Trending News