திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பயத்துடனேயே தான் வாழ்ந்தேன்.. ஏஎல் விஜய்யை விவாகரத்து செய்ததை பற்றி பகிரங்க பேட்டியளித்த அமலாபால்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அமலாபால். இவர் ‘தலைவா’ படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் விஜயின் மீது காதல் வயப்பட்டு, 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணத்தால் பிரிந்துவிட்டனர். அதன்பின் தமிழில் கடைசியாக ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அமலா பால், பிட் பட நடிகை என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூடுதல் கவர்ச்சியை வெளிப்படுத்தும் அளவுக்கு போட்டோ ஷூட்களை நடத்தி, அதனை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் அமலா பால், ஏஎல் விஜய்யை விவாகரத்து செய்ததை பற்றி தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் விவாகரத்து செய்யும் போது என்னுடைய முடிவை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு பக்கபலமாக யாரும் நிற்காமல், பயமுறுத்தவே செய்தனர்.

amala-paul-cinemapettai

அந்த சமயத்தில் நான் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும், பயத்தோடு தான் வாழ்ந்தேன். என்னுடைய சந்தோஷம் மற்றும் மனநிலையை யாரும் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை என்று அமலாபால், ஏஎல் விஜய்யை விவாகரத்து செய்யும் போது இருந்த மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே இவருடைய பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களால் பேசும் பொருளாக மாறி வருகிறது.

Trending News