திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இனி என் வழி ரஜினி வழி, ரூட்டை மாற்றிய அமலாபால்! முழுசா நனைந்த பிறகு முக்காடு போடுறீங்களே மேடம்

தமிழ் சினிமாவில் வந்த புதிதிலேயே மளமளவென பல படங்களில் நடித்து பரபரப்பான கதாநாயகியாக வலம் வந்தவர் அமலாபால். தன்னுடைய கேரியர் உச்சத்தில் இருக்கும்போது இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு அவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். திருமணத்திற்கு பிறகும் அமலாபால் சினிமாவின் மீது அதிக நாட்டம் கொண்டதால் தான் இந்த விவாகரத்து நடைபெற்றது.

அதுமட்டுமில்லாமல் அமலாபாலின் மாமனார் பல பேட்டிகளில் அமலாபாலின் நடவடிக்கைகள் திருமணத்திற்கு பிறகும் சுத்தமாக சரியில்லை எனக் கூறினார் என்பதை எல்லாம் மறந்து விட முடியுமா.

அதன் பிறகு அமலாபால் வாழ்க்கையில் இரண்டு பேர் வந்து சென்று விட்டனர். ஒரு வட இந்திய பாடகரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியானதால் அவருடன் நட்பு மட்டுமே எனவும் படப்பிடிப்புக்காக தான் அப்படி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன் எனவும் மழுப்பினார்.

சமீபகாலமாக அமலாபாலுக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாததால் படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்கவும் தயங்குவதில்லை. அப்படி அமலாபால் நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் ஒரு வெப் செரீஸ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

amalapaul-cinemapettai-01
amalapaul-cinemapettai-01

இவ்வளவு வேலைகள் செய்துவிட்டு ஆன்மிகம் தான் எனக்கு முக்கியம் என ரஜினி மாதிரி துண்டு போட்டுக் கொண்டு கிளம்பி விட்டாராம். இதைக் கேள்விப்பட்ட கோலிவுட் வாசிகள், முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு என கிண்டலடிக்கிறார்களாம். தேவையில்லாமல் ரஜினி பெயரை இழுக்க வேண்டாம் எனவும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.

Trending News