தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த அமலாபால் தற்போது மார்க்கெட் இல்லாத காரணத்தினால் 47 வயது இயக்குனருக்கு ஜோடியாகி விட்டார் என கோலிவுட் வட்டாரங்களில் கிண்டல் செய்கிறார்களாம்.
எப்போதும் போல் தமிழ் சினிமாவுக்கு மலையாள வரமாக வந்த சேர்ந்தவர்தான் அமலாபால். முதல்படமே முரட்டுத்தனமாக இருந்தது. இதனால் இவர் அப்படிப்பட்ட நடிகையோ என யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் திடீரென கமர்சியல் நாயகியாக உருவெடுத்தார்.
கதை முக்கியமில்லை, காசு தான் முக்கியம் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இதில் சில படங்கள் பெரிய வெற்றியும் பல படங்கள் தோல்வியையும் சந்தித்தன. கேரியர் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென இயக்குனர் விஜய் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் யார் கண் பட்டதோ, திருமணமான ஒரே வருடத்தில் அவரை பிரிந்து விட்டார். அதன் பிறகு அமலா பாலுக்கு நடந்தது எல்லாமே ஏழரை தான். பெரிய அளவு படவாய்ப்புகள் இல்லை, பத்தாதற்கு ஆண் நண்பர்களின் சகவாசம் என கோலிவுட் வட்டாரங்களில் புதிதாக கிளப்பி விட்டு விட்டார்களாம்.
இதனால் வாய்ப்பு இல்லாமல் தடுமாறியவர் தற்போது சிறிய கதாபாத்திரம் கிடைத்தால்கூட நடிக்க தயாராக இருந்தாராம். அந்த நேரத்தில்தான் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதில் இயக்குனர் கௌதம் மேனனுக்கு ஜோடியாக அமலாபால் ஒரு பகுதியில் நடித்துள்ளாராம். வரும் பிப்ரவரி 12ஆம் தேதி குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
