திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

டிரஸ் இல்லாமல் நடித்தது ஒரு குத்தமா? போணி ஆகாத அமலாபால்

தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் திருமணத்திற்கு பிறகு தங்களுடைய மார்க்கெட்டை இழந்து தடுமாறியதை பார்க்க முடிந்தது. ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை. திருமணத்திற்குப் பிறகுதான் நடிகைகளுக்கு வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது.

அப்படி தமிழ் சினிமாவில் விறுவிறுவென முன்னணி நாயகியாக வளர்ந்து வந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து சர்ச்சையில் சிக்கி பெயரையும் கெடுத்துக் கொண்டவர்தான் அமலாபால்.

விவாகரத்துக்கு பிறகாவது சும்மா இருக்க வேண்டுமல்லவா. அதை விட்டுவிட்டு படங்களில் ஓவர் கிளாமர் காட்டி நடிப்பது, ஆடை என்ற படத்தில் ஆடையே இல்லாமல் நடித்ததும் அவரது பெயரை அநியாயத்திற்கு டேமேஜ் செய்தது.

தற்போது சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் அமலாபால் வெப்சீரிஸ் போன்றவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். குறைந்த சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை வாய்ப்பு கிடைத்தால் போதும் என வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் தமிழில் மீண்டும் தன்னுடைய இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற போராட்டம் அம்மணிக்கு அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இரட்டை வேடத்தில் நடித்து முடித்த அதோ அந்த பறவை படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

ஆனால் அமலாபாலுக்கு தமிழ் சினிமாவில் ஏற்பட்ட கெட்ட பெயர் காரணமாக அந்த படம் போனி ஆகாமல் அப்படியே பெட்டிக்குள் முடங்கி விட்டது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். அமலாபாலுக்கு எப்போது நல்ல பெயர் உண்டாகிறதோ அப்போது தான் அந்த படத்திற்கு வியாபாரம் ஆகும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

amalapaul-cinemapettai-01
amalapaul-cinemapettai-01

Trending News