வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வசூலில் மாஸ் காட்டும் அமரன்.. அடி வாங்கிய பிளடி பக்கர், பிரதர்

Amaran 4th Day Collection: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் அமரன், கவினின் பிளடி பக்கர் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இரண்டாம் தரத்தில் உள்ள நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

அந்த வகையில் எந்த படம் அதிகம் வசூல் செய்யும் என்ற நிலையும் இருந்தது. இந்த சூழலில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான அமரன் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடித்திருந்தார்.

மு க ஸ்டாலின் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலர் இந்த படத்தை பார்த்துவிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். முதல் நாளே 42.3 கோடி உலகம் முழுவதும் அமரன் படம் வசூல் செய்த நிலையில் நான்கு நாட்களில் கிட்டத்தட்ட 132 கோடி வசூல் செய்திருக்கிறது.

அமரன், ப்ளடி பக்கர் மற்றும் பிரதர் படத்தின் நான்காவது நாள் வசூல்

மேலும் அமரன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வருவதால் பிளடி பக்கர் மற்றும் பிரதர் படத்தின் வசூல் குறைந்து இருக்கிறது. கவினின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி இருந்தது ப்ளடி பக்கர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரித்திருந்தார்.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிளடி பக்கர் ஒரு கோடி மட்டும் வசூல் செய்துள்ளது. மொத்தமாக இப்படம் 12 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவியின் பிரதர் படமும் தீபாவளிக்கு வெளியாகி இருந்தது.

குடும்ப ரசிகர்களை கவர்ந்த பிரதர் படம் நேற்று ஒரு கோடி வசூல் செய்திருக்கிறது. இந்த படமும் கிட்டத்தட்ட ப்ளடி பக்கர் போல இதுவரையில் 12 கோடி வசூலை தான் பெற்றிருக்கிறது. சிவகார்த்திகேயனின் அமரன் படத்தால் இந்த இரு படங்களின் வசூலும் பெரிய அளவில் அடிவாங்கி இருக்கிறது.

Trending News