வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பூகம்பமாக வெடித்த அமரன் பட சர்ச்சை கதை.. சிவகார்த்திகேயன், கமல் கூட்டணிக்கு ஏற்பட்ட தலைவலி

Sivakarthikeyan in Amaran Movie Problem: சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கலை ஒட்டி வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை அடுத்து இவருடைய 21வது படமான அமரன் படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படம் கமல் தயாரிப்பில் உருவாகி வருகிறது. மேலும் எஸ்கே-யின் பிறந்த நாளையொட்டி இப்படத்தின் டீசர் மட்டும் டைட்டில் வெளியானது.

இப்படத்தின் டீசரை பார்க்கும்பொழுது மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய பயோபிக் கதையும், ராணுவத்துக்கும் தீவிரவாதிக்கும் இடையில் நடக்கும் யுத்தங்களையும் வைத்து படத்தை எடுத்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. இந்நிலையில் டீசரை பார்த்த சிலர் இதில் சர்ச்சைக்குரிய காட்சி இடம் பெற்றுள்ளதாக கூறி இப்படத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தில் அமரன் பட ஹீரோ சிவகார்த்திகேயன், அப்படத்தின் தயாரிப்பாளராக இருக்கும் கமல் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் பண்ணி கண்டன குரல்களை எழுப்பி போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

Also read: அஜித்தை டேமேஜ் செய்த அமரனின் விஷமிகள்.. சிவகார்த்திகேயன் கூலிப்படை செய்யும் வேலை

அதோடு மட்டுமில்லாமல் இவர்களுடைய உருவ பொம்மையை வைத்துக்கொண்டு சாலையில் எரிக்க முயன்று இருக்கிறார்கள். இதனை தடுத்து போலீஸ், அவர்களை கைது செய்த நிலையில் அந்த இடமே தற்போது பரபரப்பாக மாறிவிட்டது. அதாவது அவர்கள் கூறிய கருத்து என்னவென்றால் அமரன் டீசரில் காஷ்மீர் மக்கள் மற்றும் இஸ்லாமிய மக்களையும் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாகவும் அதனால் இப்படத்தை தடை செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் மத கலவரம் ஏற்பட்டு, தற்போது ஒற்றுமையாக இருக்கும் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே பகை ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் தயவு செய்து இப்படத்தில் வரும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று சொல்லி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்த வரும் அமரன் படத்துக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டு மொத்த படக்குழுவுக்கும் தலைவலியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

sivakarthikeyan amaran
sivakarthikeyan amaran

Also read: நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் செய்த கேவலமான வேலை.. ஆண்டவர் இருந்தும் தட்டி கேட்கல

Trending News