திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விழாவை சிறப்பிக்க 2 பேருக்காக வெயிட் பண்ணும் அமரன் பட குழு.. இதுவரை மொத்தமாய் அடித்த வசூல்

அமரன் படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது. இன்று வரை தியேட்டரில் வார இறுதி நாட்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் அமரன் படம் 310 கோடிகளை தாண்டி உள்ளது. சிவகார்த்திகேயன் படங்களில் இதுவரை எந்த படமும் இப்படி வசூல் வேட்டை ஆடியது கிடையாது.

அமரன் படத்திற்கு பிரம்மாண்டமாய் வெற்றி விழா கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்தப் படம் ரிலீசாகி 25 நாட்கள் சக்சஸ்ஃபுல்லாக ஓடி உள்ளது. அதிலும் தமிழ்நாட்டை தாண்டி இந்த படம் 50 கோடிகளை வசூலித்துள்ளது. மொத்தமாய் 360 கோடிகள் என்ற அளவில் இருக்கிறது.

இப்பொழுது சக்சஸ் மீட் நடைபெற உள்ளது. இரண்டு பேருக்காக இந்த விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினை இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்க உள்ளனர். இந்த படத்தை பார்த்த ஸ்டாலின் ஆரம்பித்திலேயே இதற்கு நல்ல ஒரு பாசிட்டிவ் ரிப்போர்ட் கொடுத்து அசத்தினார்.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட ஸ்டானின் இன்னும் இந்த விழாவிற்கு டேட் கொடுக்கவில்லை. அதனால் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறது பட குழு. அதுவும் போக கமல் அமெரிக்காவில் இருக்கிறார். இந்த படம் ராஜ் கமல் ஃபிலிம் தயாரிப்பில் உருவானதால் அவரும் இங்கே இருக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி பார்த்தாலும் ஸ்டாலின் டேட் கொடுத்து விட்டால் அதற்கு தகுந்தார் போல் கமல் வந்து விடுவார். அதனால் இப்பொழுது இந்த விழாவை கொண்டாட பிரம்மாண்டமாய் ஏற்பாடு நடந்து வருகிறது. தக்லைப் படத்தின் ஷூட்டிங் வேலைகளை முடித்து விட்ட கமல் அமெரிக்கா சென்று ஏ ஐ டெக்னாலஜியை கற்று வருகிறார என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News