வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கங்குவா, வேட்டையனை முந்திய அமரன்.. வெற்றி கொண்டாட ரெடி, Chief Guest யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான படம் அமரன். இப்படத்தில் சிவாவுடன் இணைந்து சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். GV. பிரகாஷ் இசையமைத்திருந்தார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் பிரமாண்டமாகத் தயாரித்து, ரிலீஸுக்கு முன் தமிழ் நாட்டிலும், வட மாநிலங்களிலும், வெளி நாட்டிலும் புரமோசன் செய்தனர்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது. இப்படம் ரிலீசான முதல் நாளே எல்லோரின் வரவேற்பையும் பெற்று முதல் நாளே ரூ.42.3 கோடி வசூல் குவித்தது. அடுத்து, 3 நாளில் ரூ.100 கோடி வசூல் குவித்து சாதனை படைத்தது.

அதன் பின் ஓயாத வசூல் மழையில் நனைந்த அமரன் படத்துக்குப் போட்டியாக வந்த பிளடி பக்கர், பிரதர் உள்ளிட்ட படங்களை லெப்ட் ஹேண்டில் டீல் செய்ததுடன், சூர்யாவிடன் கங்குவாவின் வேகத்தில் அமரன் வசூல் என்னாகும்? எனக் கேள்வி எழுப்பியவர்களுக்கு அப்படத்தின் மீதான எதிர்மறை விமர்சனம் இப்படத்துக்கே சாதகமானது.

வசூல் சாதனை படைத்த கங்குவா – வெற்றி விழாவுக்கு ஏற்பாடு!

அதன்படி நவம்பர் 24 ஆம் தேதியுடன் அமரன் படம் வெளியாகி 25 நட்களில் பாக்ஸ் ஆபீஸில் ரூ.315 கோடிகள் வசூலீட்டியதாக தகவல் வெளியாகிறது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிவாவின் கேரியரில் அதிகபட்ச ஓபனிங், வசூல் சாதனை படைத்த படமாக அமரன் அமைந்துவிட்டது.

கமல்ஹாசனுக்கும் இப்படம் லாபம் கொடுத்துள்ளதுடன், தியேட்டர் ஓனர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இப்படம் லாபத்தைக் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், 25 நாட்களைக் கடந்தும் இப்படம் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், இந்த ஆண்டு வெளியான படங்களில் தி கோட் படத்துக்குப் பின் அதிக வசூல் குவித்த தமிழ்ப் படங்களில் 2 வது இடம்பிடித்துள்ளது அமரன். வேட்டையன் 3 வது இடமும், கங்குவா 4 வது இடமும் பிடித்துள்ளது.

இந்த நிலையில் அமரன் பட வெற்றியைக் கொண்டா படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 12 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமான இதன் வெற்றி விழா நடக்கவுள்ளது. இதில் தமிழ்நாடு முதல்வர் MK ஸ்டாலின் பங்கேற்று படக்குழுவினருக்கு கேடயம் வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகிறது.

Trending News