வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ரெமோ சிவகார்த்திகேயனை மிஞ்சிய கவின்.. பெண்ணிடத்தில் கலக்கும் போது புகைப்படம்

Kavin : எம்ஜிஆர், சிவாஜி முதல் எல்லா டாப் நடிகர்களுமே பெண் வேடமிட்டு ஒரு சில காட்சிகளாவது நடித்து விட்டனர். அதுவும் உலகநாயகன் கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வாறு இப்போது கவின் பெண் வேடமிட்டு வெளியிட்ட புகைப்படம் தான் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் போல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் கவின்.

லேடி கெட்டப்பில் அசத்தும் கவின்

kavin
kavin

இவருடைய டாடா மற்றும் லிஃப்ட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் லால், அதிதி பொவஹங்கர், கீதா கைலாசம் போன்றோர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் பாடல் வெளியான நிலையில் அதில் லேடி கெட்டபில் கவின் ஆடியிருக்கிறார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் பெண் வேடமிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அதேபோல் இப்போது கவினின் இந்த புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. என்னை பார்ப்பதற்கு அச்சு அசலாக பெண் போலவே கவின் இருக்கிறார்.

மேலும் கடந்த சில மாதங்களாகவே கவினை பற்றி நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. அது எல்லாம் தகர்த்தெறியும் வகையில் ஸ்டார் படம் அவருக்கு மீண்டும் ஒரு வெற்றி மகுடத்தை கொடுக்கும் என கவின் ரசிகர்கள் நம்புகின்றனர்.

Trending News