வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினியின் அடுத்த பான் இந்தியா படத்தின் அதிர வைக்கும் அப்டேட்.. லியோவை மிஞ்ச களம் இறக்கும் 4 ஹீரோக்கள்

Rajini In Thalaivar 170 Movie Update: ரஜினி தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றியில் திக்கு முக்காடி சந்தோஷத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கிறார். வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், தன்னுடைய 72 வயதிலும் ஹீரோவாக நடித்து வெற்றியை கொடுக்க முடியும் என்ற ஒரு பேரானந்தம் தான். ஆனால் இதில் ஒரு சிக்கலும் இருக்கிறது.

அதாவது இதில் செய்த சாதனையை தொடர்ந்து அடைய வேண்டும் என்பதில் இனி போராட வேண்டும். அந்த வகையில் தற்போது ஜெய் பீம் இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி அவருடைய 170 வது படத்தை கமிட் செய்திருக்கிறார். முக்கியமாக இந்த படமும் சாதனையை முறியடிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதில் முழுமூச்சாக இறங்கி இருக்கிறார்.

Also read: தமிழில் புகழ்பெற்ற நடிகையாக இருந்து.. கடைசி வரை ரஜினியுடன் நடிக்க முடியாத நடிகைகள்.!

அதற்காக இப்படத்தில் நடிக்க வேண்டிய ஆர்டிஸ்ட்களை நாலா பக்கமும் சல்லடை போட்டு தேடிப் பிடித்து இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்தாலே அந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும். அப்படிப்பட்ட ஜாம்பவான்களை வளைத்துப் போட்டிருக்கிறார் இயக்குனர்.

அவர்கள் யார் யார் என்பதைப் பற்றியும் எப்பொழுது எங்கே படப்பிடிப்பு ஆரம்பிக்க போகிறது என்பதையும் தற்போது பார்க்கலாம். இதில் முதலாவதாக ரஜினியுடன் 32 வருடங்களுக்குப் பின் கூட்டணி வைக்கப் போகிறவர் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன். அடுத்ததாக டோலிவுட்டில் இருந்து ராணா டகுபதி. இவர் வருகிறார் என்றாலே இவருக்கு பொருத்தமான கேரக்டர் வில்லன் ஆகத்தான் இருக்கும்.

Also read: சஞ்சயை வைத்து அப்பனுக்கு பாடம் சொல்லும் சங்கீதா.. லதா ரஜினிகாந்த் போல் காட்டும் புத்திசாலித்தனம்

அடுத்தது பகத் பாசில் மற்றும் மஞ்சு வாரியர். இவர்களும் தலைவர் 170 படத்தில் நடிக்கப் போகிறார்கள். ஆக மொத்தத்தில் ஒரே திரையில் ஐம்பெரும் படைகளை நாம் பார்க்கலாம்.  அந்த வகையில் இப்படம் பான் இந்திய படமாக திரையரங்கில் ஜொலிக்கப் போகிறது.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் துவங்க இருக்கிறது.

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போகிறது. வழக்கம் போல் ரஜினி படம் என்றால் அதற்கு அனிருத் இல்லாமல் எப்படி அதனால் இதிலும் அவருடைய இசையை தெறிக்க விடப் போகிறார். அத்துடன் இப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் செட் போட்டு ஆரம்பிக்கப் போகிறார்கள்.  கண்டிப்பாக லியோவை மிஞ்சும் அளவிற்கு இப்படம் அதிரடியாக இருக்கப் போகிறது

Also read: எனக்கு நீ போட்டியா.? இந்த 5 நடிகர்களை காலி செய்ய ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்.. நேக்காக கழண்ட சத்யராஜ்!

Trending News