தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் காலம் கடந்தும் பேசக்கூடிய படங்களாகவே இருக்கும். அதனால்தான் பல இயக்குனர்களும் பாரதிராஜா போல் வரவேண்டுமென நினைப்பார்கள்.
சமீபகாலமாக பாரதிராஜா படங்கள் இயக்குவதில் இருந்து விலகி நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதுவும் இவருக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருந்தால் நடிப்பதற்கு சம்மதித்து வருகிறார். அப்படி பாண்டிய நாடு, நம்ம வீட்டு பிள்ளை, ஈஸ்வரன் மற்றும் சீதகாதி ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருக்கும் பாரதிராஜா தற்போது சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள தீ ஃபேமிலி மேன் எனும் வெப் சீரிஸ்க்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழர்களை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
எங்கள் கோரிக்கையை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமேசானின் வர்த்தகத்தை புறக்கணிப்போம் என கூறியுள்ளார். இந்தப் போராட்டத்தில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அங்கு எடுப்பதைத் தவிர்க்கவும் தடுக்கவும் முடியாது எனவும் கூறியுள்ளார்.
அதற்கு பலரும் தற்போதைய ஏன் பாரதிராஜா இவ்வளவு பொங்குகிறார். ஒருவேளை படத்தில் ஏதேனும் தமிழர்களை தவறாக சித்தரித்து விட்டார்களா என தீஃபேமிலி மேன் வெப் சீரிஸ் பார்க்காத ரசிகர்கள் தற்போது அந்த வெப் சீரிஸ்சை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.
ஆனால் சமந்தா இதற்கு தீஃபேமிலி மேன் வெப்சீரிஸ் நடிப்பதற்கு முன்பு இலங்கைத் தமிழர்களின் ஆவண புகைப்படத்தை பார்த்ததாகவும் அதில் அவர்கள் சந்தித்த கொடுமைகளையும் பிரச்சனைகளையும் பார்த்த பிறகுதான் தீ ஃபேமிலி மேன் எனும் வெப்சீரிஸ் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதாக கூறியுள்ளார்.